மொத்த பிக்பாஸ் அழகிகளும் பாவாடை தாவணியில் கலக்கல் ஆட்டம்... மிரண்டு போன ரசிகர்கள்
சென்னை: மொத்த பிக்பாஸ் அழகிகளும் ஒன்றாக சேர்ந்து பாவாடை தாவணி போட்ட ஆட்டம் வைரலாக பரவி வருகிறது.
இது என்ன பங்க்ஷன் என்று ரசிகர்களின் மத்தியில் கேள்விகள் அதிகமாக எழுதியுள்ளது.
ஒரு சிலர் மட்டும் தானே இருக்கிறார்கள் மீதமுள்ளவர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் பீல் பண்ணி வருகிறார்கள்.

பாவாடை தாவணி அழகிகள்
எப்போதுமே பாவாடை தாவணியில் பெண்கள் அழகுதான் அதுவும் பலருக்கும் பரிச்சயமான பிக்பாஸ் அழகிகள் பலர் வண்ண வண்ண உடையில் போட்ட கலக்கல் ஆட்டம் ரசிகர்களின் கண்களுக்குள்ளே வலம் வந்து கொண்டிருக்கின்றதான். சமூக வலைத்தளத்தில் தங்களுடைய பேவரைட் ரடிகையின் ஆட்டத்தை பார்த்து பலர் மனம் தத்தளித்து வருகிறது. இதில் ஒரு சிலரை காணாமல் ஒரு சில ரசிகர்கள் பீல் பண்ணவும் தவறவில்லை.

ரசிகர்களை கவர்ந்த வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் ஷோ நன்றாகவே ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறது. இதில் கலந்துகொண்டு ரசிகர்களின் மத்தியில் தங்களுக்கென்று தனி இடத்தை பிடித்த ஒரு சில பெண் போட்டியாளர்கள் தற்போது விஜய் டிவியில் பொங்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் முடிந்ததும் இவர்கள் அனைவரும் சேர்ந்து சிலர் வீடியோக்களை எடுத்து இருக்கிறார்கள். தங்களின் மனம் கவர்ந்த நடிகைகளின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் சுற்றிசுற்றி வருகிறார்களாம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, ஜூலி, செரின், அனிதா சம்பத், ரித்விகா போன்ற கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் பலர் பாவாடை தாவணியில் இருப்பதால் பலருக்கும் அடையாளமே தெரியவில்லை. ஆனாலும் அழகான தேவதைகள் என்று இவர்களை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இதில் ஒரு சில ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகைகளின் பெயர்களை மென்ஷன் செய்து கமெண்டுகளில் வர்ணித்து வருகிறார்கள். இந்த எபிசோடு எப்போது ஒளிபரப்பாகும் என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதில் எடுத்த வேறு ஏதும் போட்டோக்கள் கிடைக்குமா??என்றும் பலர் சமூக வலைத்தளத்தில் மேலும் அலசி வருகிறார்கள்.

கொஞ்சம் ஏக்கம் தானாம்
தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாட்டுக்கு இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆடிய விதத்தை பார்த்ததும் பல பேர் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக இப்பவே காத்திருக்கிறோம் என்று கூறி வருகிறார்கள். ஒரு சிலர் அழகான அழகு தேவதைகளின் ஆட்டம் அசத்தல் டான்ஸ் என்று விதவிதமான கவிதைகளையும் பொழிகின்றார்கள். ஒரு சில ரசிகர்கள் இந்த அணியில் ஷிவானி, ரம்யா பாண்டியன் போன்ற தங்களின் மனம் கவர்ந்த அவர்களை காணவில்லை என்று தேடி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications