என்னை மன்னித்து விடுங்கள்.. தெரியாமல் பண்ணிவிட்டேன்! பிக் பாஸ் காமன்மேன் சர்ச்சைக்கு ராஜு விளக்கம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ராஜூ பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் போட்டியாளர்களை மரியாதை குறைவாக பேசினார் என்ற விமர்சனம் எழுந்த நிலையில் இப்போது அதற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலம் அடைந்து விடுவார்கள். அது போல தான் ஐந்தாவது சீசனில் ராஜூவுக்கும் நடந்தது. அவர் அந்த சீசனில் பெரிதாக யாரிடமும் சண்டை போடவில்லை. கிடைக்கிற இடங்களில் கவுண்டர் கொடுத்து ஜாலியான ஒரு பெர்சனாக இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக மாறி இருந்தார்.
பிக்பாஸ் ராஜு ஜெயமோகன்
அந்த சீசனில் அவர் ஒருமுறை கூட கேப்டனாகவும் இல்லை. ஆனாலும் அவர் டைட்டில் வெற்றி பெற்றது பெரிதாக பேசப்பட்டது. இதற்கு முன்பு அல்லது அதற்கு பிறகான சீசன்களில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்றாலே போட்டியாளர்கள் உள்ளே சண்டை இழுத்து ப்ரமோக்களில் இடம் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் தான் கடைசி வரைக்கும் இருக்க முடியும் என்று பல போட்டியாளர்கள் நினைத்து இருந்தார்கள். ஆனால் ராஜூ அப்படி நடக்கவில்லை

எதிர்பாராத டைட்டில் வின்னர்
பிக் பாஸ் டைட்டில் வின்னரானதும் அவருடைய வாழ்க்கை மாறும் என்று நினைத்தால் பெரிதாக மாற்றம் வரவில்லை. ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த திரைப்படங்களும் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுக்கவில்லை. அதுபோல விஜய் டிவியில் ராஜு வீட்டுல பாட்டி என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு நாள் சிறப்பு விருந்தினராக வந்த மன்சூர் அலிகான் நீ பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான பிறகும் எதற்கு இப்படி சுற்றிக்கொண்டு இருக்கிற.. ஒழுங்கா போய் படத்தின் நடிக்கிற வேலையை பாரு என்று திட்டியிருந்தார்.
அதற்கு பிறகு அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்தும் விலகி விட்டார். முழுமையாக படங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் தான் அவருக்கு பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்தார். அப்போதும் அவர் ஜாலியாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அதுவே அவருக்கு வினையாக மாறிவிட்டது.
பிக் பாஸ் காமன்மேன் சர்ச்சை
இந்த நிகழ்ச்சியில் ராஜுக்கு மட்டுமல்ல ஆரிக்கும்தான் பிரச்சனைதான் ஆரி இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததற்கும் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததற்கும் அதிக வித்தியாசம் இருந்ததாக கூறப்பட்டது. அவர் இதற்கு முன்பு பெண்கள் மற்றும் போட்டியாளர்களிடம் மரியாதையாக பேசினார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் நடுவரான பிறகு அவருடைய நடவடிக்கை சரி இல்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது.
மன்னிப்பு கேட்ட ராஜு
இப்படியான நிலையில் ராஜு, பிக் பாஸ் காமன்வென் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் மரியாதை குறைவாக நீ வா போ என்று பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார். நான் நடந்து கொண்டு விதம் போட்டியாளர்களை காயப்படுத்தி மரியாதை குறைவாக காட்டியதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இனி என்னை நான் திருத்திக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே ஆரி மீது விமர்சனம் வந்தபோது அவர் நான் போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டிற்குள் இதை விட கடுமையான போட்டிகளிலும், டாஸ்க்குகளும் இருக்கும் அதனால் தான் நாங்கள் அவர்களை தயார்படுத்தி அனுப்புகிறோம் என்று சொல்லி இருந்தார். ஆனால் ராஜு தன்னைப் பற்றிய விமர்சனங்கள் வந்ததும் அதை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
