பிக் பாஸ் அசீமை தொடர்ந்து தனலட்சுமி வெளியிட்ட போஸ்ட்.. அடுத்த பிரச்சனை தொடங்கிடுச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து சில மாதங்கள் ஆகியிருந்த நிலையில் இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே அசீம் வெற்றி பெற்றது சரியில்லை என்று அவர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் பயங்கரமாக குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளராக இருந்த தனலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரைக்கும் 6 சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. ஆனால் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு சண்டை சச்சரவுகளும் பிரச்சனைகளும் கடந்த ஆறாவது சீசனில் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த சீசன் தொடங்கிய நாளிலிருந்து போட்டியாளர்களுக்குள் பல பிரச்சனைகள் வெடித்துக்கொண்டே இருந்தது.
ஆனால் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு சண்டை சச்சரவுகளும் பிரச்சனைகளும் கடந்த ஆறாவது சீசனில் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் பல பிரச்சனைகள் வெடித்துக் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனில் டைட்டில் வின்னராக விக்ரமன் வருவார் என்று நினைத்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் அசீம் வெற்றி பெற்றதும் பலருக்கும்
பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அது குறித்து அதிகமானோர் தங்களுடைய கருத்துக்களையும் வெளியிட்டுக் கொண்டு இருந்தனர்.
அதுபோலவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போதும் சரி வெளியே வந்த பிறகும் சரி பிக் பாஸ் போட்டியில் அவர்கள் பலர் பேட்டி கொடுக்கிறேன் என்கிற பெயரில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில் ஆரம்பத்தில் விக்ரம் அணியில் இருந்த தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி பிறகு அசீம் சைடு மாறி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையாக இருப்பது அசீம் மட்டும் தான் என்றும் பேட்டிகளில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் விக்ரமன் மீது கிருபா என்கிற வழக்கறிஞர் தன்னை காதலித்து பண மோசடி செய்து விட்டார் என்று தொடர்ச்சியாக சில ஸ்கிரீன்ஷாட்களையும், ஆதாரங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அது குறித்து விக்ரமன் தன் தரப்பு நியாயங்களையும், ஆதாரங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அசீம்," நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி ஏரிய உனைகேட்கும் நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்" என் தத்துவம் ரீச் ஆகும் நான் என்ன கொஞ்சம் லேட்டா ஆகும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து அதிகமான ரசிகர்கள் நீங்கள் விக்ரமனுக்கு தானா இப்படி கேப்ஷன் கொடுத்து இருப்பது என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தனலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதற்கு பிக் பாஸ் மெமரிகள் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.
"அதில் கலப்படமான நல்லவனா இருக்கிறதை விட, சுத்தமான கெட்டவனா இருந்துட்டு போயிடலாம்" இது ஜஸ்ட் போஸ்ட் தான் என்றும் கூறி இருக்கிறார். ஆனாலும் ரசிகர்கள் தொடர்ச்சியாக இது விக்ரமன் பிரச்சனைக்கு நீங்கள் கொடுக்கும் பதில் தானா? என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கு தனலட்சுமி எந்த பதிலும் கொடுக்கவில்லை. என்றாலும் தொடர்ச்சியாக அதிகமான ரசிகர்கள் இது விக்ரமன் பற்றி தான் நீங்கள் இப்படி ஒரு பதிவு போட்டு இருக்கிறீர்களா? என்று கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications