நீ என்னை காதலிக்கணும்.. அரோராவிடம் ஐஸ் வைக்கும் பிரவீன் காந்தி! ரட்சகன் இயக்குநர் இப்படி மாறிட்டாரே!
சென்னை: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில், முதல் வாரத்திலேயே களேபரம் களைகட்டி வருகிறது. இங்கே சண்டை, பாசம், தியாகம் எனப் பல உணர்வுகள் ஒருபக்கம் ஓடினாலும், இன்னொருபக்கம், தான் ஒரு 'மாஸ்' இயக்குநர் எனச் சொல்லிக்கொண்டு அலப்பறை கொடுக்கும் இயக்குநர் பிரவீன் காந்தியின் செயல்பாடு, வீட்டுக்குள்ளேயும் வெளியிலேயும் ஒரே சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

கண்டெண்ட் கிங் பிரவீன் காந்தி
இயக்குநராகவும் நடிகராகவும் பிரபலமான பிரவீன் காந்தி, தமிழ் சினிமாவில் பல வருடங்கள் பயணித்தவர். அவர் இயக்கிய திரைப்படங்களில் முக்கியமானவை: 'ரட்சகன்', 'ஜோடி' (குடும்பப் படமாக ஓரளவுக்கு வெற்றி பெற்றது) துள்ளல் போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதிலும் துள்ளல் படத்தில் இவரே கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த படம் அவருக்கு பெரிய அளவில் தோல்வியை கொடுத்தது.
இவரது திரைப்படப் பயணத்தில், வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும், இவர் பேசிய சர்ச்சையான விஷயங்கள் பலமுறை மீடியாவில் பேசுபொருளானது. தன் படங்களின் பிரம்மாண்டம் பற்றியும், கோலிவுட்டில் தனது செல்வாக்கு பற்றியும் அடிக்கடித் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் இவரது பேச்சுகள், எப்போதும் கலாய் வட்டாரத்தில் பிரபலம்தான். இப்போது அதே பாணியைத்தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் பிரவீன் காந்தி
பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்து, பிரவீன் காந்தி தன்னை ஒரு சீனியர் மற்றும் அறிவாளியாகக் காட்டிக்கொள்ளத் தவறவே இல்லை. போட்டியாளர்களுக்கு இடையே சண்டை நடக்கும்போதெல்லாம், இவர் நடுவில் நுழைந்து, "அன்பும் அறிவும் தான் என் வழி" என்ற பாணியில், அறிவுரை சொல்ல முயற்சி செய்கிறார்.
ஆனாலும், ஹவுஸ்மேட்ஸை டார்கெட் செய்வதிலும், கண்டெண்ட் கொடுப்பதிலும் இவர் துளியும் சளைத்தவர் அல்ல. ஒருபக்கம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை அதிக தற்பெருமைக்காகவும், இன்னொருபக்கம் அகோரி கலையரசன் எதற்காக வீட்டிற்குள் வந்தார் என்ற குழப்பத்துக்காகவும் இவர் நாமினேட் செய்தது, வீட்டிற்குள் இருக்கும் பலருக்கும் பிடிக்கவில்லை.
நீயும் நானும் லவ் பண்ணுவோம்
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டின் இவரது பேச்சை பார்த்தால், இவர் ஒரு இயக்குநராக அல்லாமல், தன்னை ஒரு காதல் மன்னனாகக் காட்ட முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது.
நேற்று இரவு அரோராவிடம் இவர், "இந்த சீசன் பெருசா போகணும்னா, நீயும் நானும் லவ் பண்ணணும், அதுவும் நான் உன்னை லவ் பண்ண கூடாது" என்றும், "நீ என்னை வெறித்தனமா லவ் பண்ணணும், நான் வேண்டாம்னு, உன்னைக் கண்டுக்கவே கூடாது. ஆனால் நீ என் பின்னாடியே சுத்திக்கிட்டே இருக்கணும்" என்றும் சவாலான ஒரு 'உதார்' பேச்சு பேசியிருக்கிறார்.
மேலும், "அப்படிப் பண்ணா இந்த சீசன் TRP எகிறிடும். இதை நான் ஏன் சொல்றேன்னா ஒரு டைரக்டர் எனக்குத் தெரியும்" என்று ஓப்பனாகவே TRP ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார்.
ஒரு இயக்குநர், சீசனின் வெற்றிக்காகப் போட்டியாளர்களிடம் இப்படி 'லவ் ஸ்கெட்ச்' போடுவது, ரசிகர்களைச் சிரிக்கவும், கலாய்க்கவும் வைக்கிறது. இவர் காதல் ஸ்கெட்ச் போட்ட அந்தப் பெண், தனது அடுத்த ரட்சகனாக இவரைக் கௌரவிப்பாரா என்று தெரியவில்லை!
இவர்தான் முதல் ஆளாக வெளியேறுவாரா?
வெளியே இவ்வளவு 'கண்டெண்ட் டிராமா' கொடுத்தாலும், பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த வார முதல் நாமினேஷன் பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளார்.
பிரவீன் காந்தியின் இந்த 'எல்லாம் எனக்குத் தெரியும்' பாணியும், சினிமா வசனங்களைப் பேசி அட்வைஸ் செய்யும் விதமும், அவருக்கு வீட்டில் எதிர்ப்பைத் தேடிக் கொடுத்துள்ளது. இவரது விளையாட்டு ரசிகர்களுக்குச் சிரிப்பை வரவழைத்தாலும், வீட்டின் போட்டியாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, இவரைக் குறிவைத்து நாமினேட் செய்யத் தூண்டியிருக்கிறது.
மொத்தத்தில், பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு இயக்குநர், தன் சினிமா சூத்திரங்களை எல்லாம் போட்டு, காதல், சண்டை, அறிவுரை எனப் பலவிதமான 'கன்டென்ட்' கொடுக்க முயற்சிக்கிறார். இனி வரும் வாரங்களில், இவரது 'உதார்' எடுபடுமா அல்லது வீட்டுக்குள்ளே இவர் 'பப்படம்' ஆவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications