ரஹ்மான் உன்னதமான மனிதர்.. பணத்துக்காக சிலர் தவறாக பேசுகிறார்கள்.. பிரபல பாடகி, பாடகர் திடீர் பதிவு
சென்னை: இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பற்றிய வதந்திகள் பரவி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாடகர் ஏடிகே மற்றும் ஐக்கி பெர்ரி இருவரும் ரஹ்மான் பற்றி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்கள். அது அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா சார்பாக வழக்கறிஞர் வந்தனா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து சாய்ரா விடுபட போவதாகவும், ஏ ஆர் ரஹ்மானை பிரிவதாகவும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த சினிமாவும் இது பற்றி தான் அதிகமாக பேசி வந்தது.

இதை அடுத்து ஏஆர் ரஹமான் சில மணி நேரத்தில் சாய்ரா வெளியிட்ட தகவலை உறுதிப்படுத்தி இருந்தார். அதோடு தாங்கள் இருவரும் மனம் ஒத்து பிரிய போகிறோம் அதனால் எங்களுக்கு தனிப்பட்ட உரிமை தாருங்கள். தயவுசெய்து இதை பெரிது படுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இதுவரைக்கும் ஏ.ஆர் ரகுமான் பற்றி எந்த கிசுகிசுப்புகளோ, வதந்திகளோ வந்தது கிடையாது.
மேடையில் பேசும்போது கூட சில வார்த்தைகள் மட்டுமே பேசுவார். யாரைப் பற்றியும் பேசியது கிடையாது. மேடைகளில் தமிழில் பேச சொல்லி தான் தன்னுடைய மனைவியிடம் கூட கூறி இருக்கிறார். அதுபோல சாய்ரா மற்றும் ரஹ்மான் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது திருமணத்திற்கு பிறகு அவர்களுக்குள் இருக்கும் காதல் மற்றும் புரிதல் பற்றியும் பேசி இருக்கிறார்கள்.

மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பிறகு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதே நேரத்தில் இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற கேள்விகளும் எழுந்து வந்து கொண்டிருந்தபோது ஏஆர் ரஹ்மான் பற்றி அவரோடு பணியாற்றிய எடிகே ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் ரஹ்மானை பற்றி சின்ன குழந்தைகளுக்கு தெரியும். எந்த பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்.

அப்படி இருப்பவரை பற்றி இப்படி எழுதுகிறார்களே என்பது வருத்தமாக இருக்கிறது. ரஹ்மானுடன் வேலை பார்த்தவர்களிடம் அவர் எப்படிப்பட்டவர் என்று கேட்டுப் பாருங்கள், அவர் உன்னதமான மனிதர். பணத்துக்காக சிலர் ரஹ்மான் பற்றி தவறாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர் பற்றி கமாண்டுகளில் தவறான செய்தியை போட வேண்டாம் என்று ஏ டி கே வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
ஏடிகே போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராப் பாடகி ஐக்கி பெரி ஏ.ஆர் ரஹ்மானோடு எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவரும் பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் சிலர் தூய்மையான இதயத்துடன் தங்கள் இசையின் மூலம் பேசும் இதயத்தோடு பிறக்கிறார்கள். என்னை பொறுத்தவரை ஏஆர் ரஹமான் சார் அத்தகைய தேவதைகளில் ஒருவர்.
சிறுவயதிலிருந்தே எனது பயணத்தின் போது ஒரு பகுதியாக இருந்த ரத்தினம். வளரும் போது அவருடைய இசை எனக்கு துணையாகவும், ஆறுதலாகவும், உத்வேகமாகவும் இருந்தது. சமீபத்தில் ஏஆர்ஆர் பிலிம் சிட்டியில் விழாவில் அவரை சந்தித்ததில் எனக்கு மரியாதை கிடைத்தது. அங்கு அவர் எங்களின் இதிகாசம் பாடலை பாடினார். அந்த தருணம் என்றும் மறக்க முடியாது.

இன்று மிகவும் தூய்மையான மற்றும் தெய்வீகமான ஒருவரை சுற்றி எதிர்மறை பரவி வருவதை பார்க்கும் போது என்னுடைய இதயம் உடைகிறது. அவர் இத்தனை நாட்களாக கட்டி காப்பாற்றி வந்த அவருடைய காதல் மீது பல சர்ச்சைகள் விழுகிறது. இசையின் மூலம் ஒளியை பரப்புவதற்கு மட்டுமே தெரிந்த ஒரு ஆன்மாவை ஆதரிப்பதற்கு நீங்கள் எல்லோரும் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்று அதில் பகிர்ந்து இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications