எங்க வீட்டில் விசேஷம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த பிக்பாஸ் அன்ஷிதா.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கலையே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்த நடிகை அன்ஷிதா கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இப்போது தன்னுடைய குடும்பத்தில் நடந்த மகிழ்ச்சி விஷயத்தை ரசிகர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதாவது தன்னுடைய நீண்ட நாள் கனவான புது வீட்டை அன்ஷிதா வாங்கி இருக்கிறார். அந்த வீட்டில் கிரகப்பிரவேசத்தை அன்ஷிதா முடித்திருக்கிறார். அது குறித்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அஞ்சிதா மலையாள சீரியல்களில் நடித்து வந்தார். விஜய் டிவியில் இவருக்கு செல்லம்மா சீரியல் தான் பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. இந்த சீரியலில் அமைதியின் சுரூபமாக இருக்கும் அன்ஷிதா நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது நான் ரொம்பவே ஜாலி டைப்புங்க என்று பல பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் சில வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிகர் அர்னவ் நடித்து வந்தார்.

அன்ஷிதா பற்றிய சர்ச்சை
அப்போது அன்ஷிதா மற்றும் அர்னவ் இருவரும் ஜோடியாக ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். அந்த நேரத்தில் அர்னாவ் மனைவி அன்ஷிதா மீது பல குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார். ஆனாலும் எங்கள் நட்பில் எந்த மாற்றமும் கிடையாது என்று அன்ஷிதா மற்றும் அர்னவ் இருவரும் ஜோடியாக ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.
பிக் பாஸ் போட்டியாளர்
இரண்டு வருடங்களை கடந்து ஒளிபரப்பாகி வந்த அந்த சீரியல் திடீரென முடிவுக்கு வந்த நேரத்தில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் அன்ஷிதா போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதே நிகழ்ச்சியில் அர்னவும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் இருவரும் அந்த நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் தெரியாதது என்பது போலவே நடந்து கொண்டனர்.

நட்பு பிரிந்தது
பிறகு சில வாரங்களில் அர்னவ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அன்ஷிதா தான் அதிகமான வாரங்கள் இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலமாக அன்ஷ்தா மீது அதுவரைக்கும் இருந்த பார்வை ரசிகர்கள் மத்தியில் மாறி இருந்தது. அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அன்ஷிதா கோமாளியாக கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் பிரியங்கா உடன் அன்ஷிதாவிற்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
புது வீடு வாங்கிய அன்ஷிதா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா 84 நாட்கள் இருந்தார். அவருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. அதன் மூலமாக அவருக்கு சுமார் 21 லட்சம் வரை சம்பளம் கிடைத்ததாக கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஷாலுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது ஆனாலும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று அன்ஷிதா மற்றும் விஷால் இருவரும் பேசி இருந்தனர். இந்த நிலையில் தன்னுடைய நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை அன்ஷிதா வாங்கி நிறைவேற்றி இருக்கிறார்.

அன்ஷிதா பதிவு
அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு வெளியிட்டிருக்கிறார், அதில், "புதிய தொடக்கங்கள். என்னுடைய கனவு நிஜமாக மாறி உள்ளது. இது வெறும் வீடு அல்ல, கடவுளின் பரிசு. கடினமான காலத்தில் என்னுடன் நின்றவர்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. எனக்கே என்மேல் சந்தேகம் வந்த போது என்னை நம்பி நான் மலர்வதற்காக நீங்கள் உதவினீர்கள். எனக்கு கடினமான நாட்களை கொடுத்தவர்களுக்கும் நன்றி.
ரசிகர்களின் வாழ்த்துக்கள்
ஏனென்றால் நீங்கள் என்னை வலிமையான அசைக்க முடியாதவர்களாக மாற்றி உள்ளீர்கள். நன்றி உணர்வு நிறைந்த இதயத்துடன் புதிய அத்தியாயத்திற்கு தயாராக இருக்கும் இந்த ஆன்மாவுடன் எனது சிறிய சொர்க்கத்தில் புதிய தொடக்கத்தை தொடங்குகிறேன்" என்று அந்த பதிவில் அன்ஷிதா பகிர்ந்து இருக்கிறார். புது வீட்டில் மண் பானையில் பால் காய்ச்சி வீடு குடி புகுந்த புகைப்படங்களையும் அன்ஷிதா பகிர்ந்து இருக்கிறார். அதோடு விஷால் மற்றும் சில பிக்பாஸ் போட்டியாளர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் அன்ஷிதா பகிர்ந்து இருக்கிறார். அன்ஷிதாவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications