பிக் பாஸ் அமீர் பாவனி திருமணம் நடந்து முடிந்தது..நாத்தனார் முடிச்சு போட்ட பிரியங்கா! கணவர் ரியாக்ஷன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலர்களான பாவனி மற்றும் அமீருடைய திருமணம் இன்று நடைபெற்று இருக்கிறது. இவர்களுடைய திருமணத்தில் இவர்களின் பிக் பாஸ் தோழியான பிரியங்கா நாத்தனார் முடிச்சு போட்டு இருக்கிறார். பிரியங்காவிற்கு சில நாட்களுக்கு முன்புதான் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரியங்கா தன்னுடைய கணவரோடு கலந்து கொண்டார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனி ஏற்கனவே சின்னத்திறையில் அறிமுகமானவர்தான். ஆரம்பத்தில் ஒரு சில சீரியலில் நடித்திருந்தார். அதிலும் சின்னதம்பி சீரியல் பாவனிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதுபோல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருந்தார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி கலந்து கொண்டதும் அவருக்கு அதிகமான ஃபேன்ஸ் பேஜ் தொடங்கப்பட்டது.

பிரியங்காவால் நிறைவேறிய காதல்
பாவனிக்கு ஏற்கனவே கன்னட சீரியல் நடிகருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் பாவனியின் கணவர் தற்கொலை செய்துவிட்டார். இதுகுறித்து பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசியிருந்தார். அதே ஐந்தாவது சீசனில் தான் வைல்ட் கார்டு போட்டியாளராக அமீர் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஒரு வாரத்திலேயே பாவனி பின்னாடி சுற்ற தொடங்கிவிட்டார். அவரை காதலிப்பதாக பல இடங்களில் பேசி இருந்தார்.
பிக் பாஸ் காதலர்கள்
இவர்களுடைய காதலுக்கு தூது புறாகவாக விஜே பிரியங்கா தான் இருந்து வந்தார். ஆரம்பத்தில் பாவனி அமீருடைய காதலை ஏற்றுக் கொள்ளாமலே இருந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் பிக் பாஸில் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக டான்ஸ் ஆடியிருந்தனர். இவர்களே டைட்டிலும் வெற்றி பெற்றிருந்தனர். அதனால் டைட்டில் வெற்றி பெற்ற அதே நாளில் அமீர் மீது தனக்கு இருக்கும் காதலை சோசியல் மீடியா பக்கத்தில் பாவனி தெரிவித்து இருந்தார்.
அமீர் பாவனி திருமணம்
அதற்கு பிறகு சில வருடங்களாகவே இவர்களுடைய காதல் வாழ்க்கை பயணித்து வரும் நிலையில் இன்று திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு பிரியங்கா தான் முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். அமீருடைய அம்மா இறந்து போனது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் எமோஷனலாக சொல்லி இருந்தார்.
குடும்பத்தில் பிரச்சனை
அதுபோல அமீரை ஒரு மாஸ்டர் ஆக்கி அவருக்கு பல வாய்ப்புகளையும் வாங்கி கொடுத்தது பிக் பாஸ் போட்டியாளரான ஐசுவின் குடும்பத்தினர் தான். ஐசுவின் அப்பா மற்றும் அம்மா குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் உருக்கமாக பேசியிருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது அமீருக்கும் ஐசுவின் குடும்பத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் அமீர் ஐசுவின் குடும்பத்தோடு வீடியோ போடுவதை தவிர்த்து இருந்தார்.
பிரியங்காவின் கணவர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐசு இருக்கும்போது அவருக்கு அமீர் சப்போர்ட் செய்யாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று பாவனி மற்றும் அமீர் திருமணத்தில் கூட ஐசுவின் குடும்பத்தினர் கலந்து கொண்டதாக தெரியவில்லை. அது குறித்த புகைப்படங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் பிரியங்கா பாவனி மற்றும் அமீருக்கு திருமணத்தின் போது டான்ஸ் ஆடிய போது அவருடைய கணவர் பிரியங்காவையே பார்த்த வண்ணமாக நின்று கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications