இதனால்தான் விவாகரத்தா? 2வது மனைவி குழந்தையோடு பிக் பாஸ் மணிகண்டன் பதிவு! முதல் மனைவியின் திடீர் போஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் மணிகண்டன் ராஜேஷ் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இரண்டாவது மனைவி மற்றும் இரண்டாவது பெண் குழந்தையோடு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் முதல் மனைவி வெளியிட்ட பதிவு இணையத்தில் பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஒரு சிலர் அறிமுகமாகி பெரிய அளவில் பிரபலமாகி இருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய சகோதரர்தான் மணிகண்டன். ராஜேஷ். மணிகண்டன் ராஜேஷ் சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்திருந்தார். வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் வெள்ளி திரையில் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

பிக் பாஸ் மணிகண்டன் ராஜேஷ்
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பெரிய அளவில் அவருக்கு இன்னும் வெற்றி கிடைக்காமல் தான் இருக்கிறது. சமீபத்தில் தான் டான்ஸ் கிளாஸ் ஒன்று தொடங்கி இருந்தார். அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதுபோல மணிகண்டன் நடிகை சோபியாவை தான் காதலித்து திருமணம் செய்திருந்தார். சோபியா அட்டக்கத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுபோல சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் மருமகள் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. மணிகண்டன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது சோபியா அவருக்காக தன்னுடைய மகனோடு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விவாகரத்து செய்தி
ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளியானது. இருவரும் அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை அறிவிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியா பக்கங்களில் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்து அதை உறுதி செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று மணிகண்டன் ராஜேஷ் தனக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று போஸ்ட் போட்டிருக்கிறார்.

அதிலும் தன்னுடைய இரண்டாவது மனைவி யார் என்று அதில் குறிப்பிடவில்லை என்றாலும் அவருடைய மனைவியோடு எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சோபியா மற்றும் மணிகண்டனின் முதல் மகன் மணிகண்டனின் இரண்டாவது மகளை முத்தம் கொடுத்து கொஞ்சுவது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை சோபியா போஸ்ட்
இந்த நேரத்தில் சோபியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என்னுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயம் இப்போது தொடங்கி இருக்கிறது. நான் இன்னும் வலிமையாக மாறி இருக்கிறேன்" என்று போஸ்ட் போட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications