Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Samyuktha: இந்திய கிரிக்கெட்டரை இரண்டாவதாக திருமணம் செய்த சம்யுக்தா.. இவர் வாழ்க்கையில் இத்தனை பிரச்சனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அடையாளம் பெற்றவர் மாடல், நடிகை சம்யுக்தா. இந்த நிகழ்ச்சிக்கு முன்பு சம்யுக்தா ஒரு சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு அடையாளம் பெற்று கொடுத்தது. அவர் இன்று பிரபல கிரிக்கெட்டரை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

சம்யுக்தாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது. அதற்கு பிறகு தனது மகனை சிங்கிள் பேரண்டாக வளர்த்து வந்த அவரது வாழ்க்கை பயணம், தற்போது சந்தோஷமான புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்தின் மகன் அனிருத்தா ஸ்ரீகாந்தைத் திருமணம் செய்துள்ள அவருக்கு, ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Bigg Boss Samyuktha vijay tv

சம்யுக்தாவின் திரைப் பயணம்

உண்மையில் சம்யுக்தா ஒரு மாடலாகவே தனது கலைத்துறை பயணத்தை தொடங்கினார். இவருக்குத் திருமணமானதால் சிறிது காலம் திரையுலகில் இருந்து விலகி இருந்தார். தன்னுடைய முதல் திருமணம் முடிந்த சமயத்தில் இனி தன்னுடைய குடும்பம் தான் தனக்கு எல்லாமே என்று நினைத்த நேரத்தில் தான் இவர் கர்ப்பமாக இருந்திருக்கிறார். அப்போது அவருடைய கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு போயிருந்தாராம். அந்த நேரத்தில் அங்கு ஒரு பெண்ணோடு தான் வாழ்ந்து வருவதாக வீடியோ காலில் சம்யுக்தாவிடம் சொன்னதாக சம்யுக்தா கண்கலங்கி பல பேட்டிகளில் பேசியிருந்தார்.

தன்னுடைய முதல் திருமணம் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் நடிக்க திரும்பி வந்தவர், சன் டிவியில் ஒளிபரப்பான 'சந்திரகுமாரி' போன்ற பல தமிழ் தொடர்களில் நடித்துப் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளரா கலந்து கொண்டு, தனது விவாகரத்து, மகனைப் பற்றி பேசி, பலரது அன்பை பெற்றார்.

அதற்குப் பிறகு சினிமாக்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது தன்னம்பிக்கை நிறைந்த பேச்சுகளும், உணர்ச்சிப்பூர்வமான மன உறுதியும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

Bigg Boss Samyuktha vijay tv

திருமண நிகழ்வு

கடந்த சில மாதங்களாகவே, சம்யுக்தா ஒரு ஆண் நண்பருடன் பார்ட்டி கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு இரண்டாவது திருமணமா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், சம்யுக்தா தனது வாழ்க்கையில் அனிருத்தா ஸ்ரீகாந்த் வந்துள்ளதை உறுதிப் படுத்தியதுடன், அவரைத் இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதையும் அறிவித்தார்.

இந்நிலையில், சம்யுக்தா மற்றும் அனிருத்தாவுக்குத் திருமணம் இன்று நடைபெற்றது. இது ஸ்ரீகாந்த் இல்லத்தில் குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ள மிகவும் நெகிழ்ச்சியாக நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

யார் இந்த அனிருத்தா ஸ்ரீகாந்த்

சம்யுக்தா திருமணம் செய்துள்ள அனிருத்தா ஸ்ரீகாந்த், முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் கிரிஸ் ஸ்ரீகாந்தின் மகன் தான். அனிருத்தா ஸ்ரீகாந்தும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் தான். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது அத்தியாயம்

விவாகரத்து என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல, அது ஒரு பகுதியின் முடிவுதான் என்பதைச் சம்யுக்தா மற்றும் அனிருத்தா தம்பதியினர் நிரூபித்துள்ளனர். இருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் சவால்களைக் கடந்து, பரஸ்பரப் புரிதலுடன் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருப்பது அனைவருக்கும் தன்னம்பிக்கை அளிக்கிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தத் தம்பதியினருக்கு மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+