எனக்கு குழந்தை பிறந்து விட்டது! ஆனால், உருக்கமாக பதிவிட்ட ஷாரிக்.. தாத்தா, பாட்டியான ரியாஸ்கான்- உமா தம்பதி
சென்னை: நடிகர் ரியாஸ்கான் உமாரியாஸ் கானின் மகனும் பிக் பாஸ் பிரபலமான ஷாருக் தனக்கு குழந்தை பிறந்து இருக்கும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னுடைய குழந்தையை தான் தோளில் போட்டு இருக்கும் அழகிய புகைப்படங்களையும் ஷாரிக் பகிர்ந்து நெகிழ்ந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களும் அவருடைய குடும்பத்தினரும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் ரியாஸ்கானும் ஒருவர். வின்னர் படத்தில் கட்டத்துரை என்ற கதாபாத்திரத்தில் பெரிய அளவில் பிரபலமானார். அதற்கு முன்பு சின்ன சின்ன கேரக்டரில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது வின்னர் திரைப்படம்.

சினிமா தம்பதி
அதற்குப் பிறகு இப்ப வரைக்கும் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் ரியாஸ்கான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ரியாஸ் கான் போலவே அவருடைய மனைவி உமாரியாஸ் கானும் சினிமா மற்றும் சீரியல் என்று நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் ஷாரிக் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்குப் பிறகும் தொடர்ந்து சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஷாரிக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய காதலியான மரியா ஜெனிபரை திருமணம் செய்து கொண்டார்.
பிக் பாஸ் பிரபலம் ஷாரிக்
மரியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு தனியாக வாழ்ந்து வந்த மரியாவை குடும்பத்தினரின் சம்மதத்தோடு ஷாரிக் திருமணம் செய்து கொண்டார். இது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் அதை பார்க்காமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

மகன் பிறந்தார்
இந்த நிலையில் ஷாரிக்கு நேற்று வெளியிட்ட பதிவில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அறிவித்திருக்கிறார். அதோடு, "என் வாழ்க்கையின் காதலுக்கு இதுவரை இல்லாத சிறந்த பரிசை கொடுக்க விரும்பினேன்.. அதனால் நான் அவளுக்கு என் மினி பதிப்பை கொடுத்தேன். ஜூன் 28, 2025 அன்று நாங்கள் ஆண் குழந்தையை வரவேற்றோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்? குழந்தை பிறந்து சில நாட்கள் கழித்து நேற்று ஷாரிக் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். குழந்தையை தன்னுடைய தோளில் போட்டு கொஞ்சியபடி எடுத்த வீடியோவை ஷேர் பகிர்ந்து இருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications