கமலுக்கு டப் கொடுக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி..வேற லெவல் மாற்றம் தான்..வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தியின் லேட்டஸ்ட் கெட்டப் பார்த்து ரசிகர்கள் வியந்து போய் இருக்கிறார்களாம்.
இந்த வயதிலும் இப்படி ஒரு கலக்கலா என்று பலர் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
சுரேஷ் சக்கரவர்த்தி இப்போ தாத்தா இல்ல.. ஹீரோ...என்று இளைஞர்கள் பலரும் பாராட்ட தவறவில்லையாம்.

இப்போ பிரபலம்தான்
ஒரு காலத்தில் திரைப்படங்களில் தனக்கென்று தனி அடையாளம் கிடைக்காவிட்டாலும் காலம் கடநத பிறகு கூட சிலர் தங்களுடைய அடையாளத்தை சிறப்பாக வெளிக்காட்டி ஜொலித்து விடுகிறார்கள். கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நடிகைகள் கூட பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், தற்போது அம்மா கேரக்டரில் அசத்தி வருகிறார்கள்.அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு அது அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது இல்லை. ஆனால் தற்போது அவருடைய பெயரை சொன்னதும் பலருக்கும் தெரிந்து விடும் அளவில் பிரபலமாகி இருக்கிறார்.

அழகனில் அறிமுகம்
1991 ஆண்டு வெளியான அழகன் திரைப்படத்தில் அறிமுகமான சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது சமூக வலைத்தளத்தில் பேரழகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நடிகர் மட்டுமல்லாமல் பிரபலமான சமையல்காரராக youtube சேனல்களில் இவர் கலக்கிக் கொண்டிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவர் பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமடைந்தார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை கேப்ரில்லா தாத்தா என்று அழைத்து தற்போது உலகம் எங்கும் ரசிகர்கள் இவரை தாத்தா என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியிட்ட வீடியோ தற்போது பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

கலக்கி வரும் தாத்தா
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, கமலுக்கு போட்டியாக தேவர் மகன் படத்தில் கமல் கெட்டப்பை போட்டுக்கொண்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக "போற்றிப் பாடடி பெண்ணே" என்னும் பாடலுக்கு ஸ்டைலாக பர்பாமன்ஸ் பண்ணி இருக்கிறார். இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சுரேஷ் சக்கரவர்த்தி தட்டிவிட்ட சிறிது நேரத்திற்குள் லைக்குகள் அள்ளிக் கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய தீவிரமான ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை குவிக்க தொடங்கி இருக்கிறார்கள். சுரேஷ் சக்கரவர்த்தி தனக்கே உரிய பாவனையோடு அனைவரையும் நக்கல் நையாண்டித்தனம் பண்ணி பார்த்த ரசிகர்களுக்கு தற்போது இவருடைய லேட்டஸ்ட் வீடியோ வித்தியாசமாகத்தான் இருந்து வருகிறதாம்.

இது வேற லெவல் தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சிலருடைய வெளியேற்றம் ரசிகர்களை அதிகமாக ஃபீல் பண்ண வைத்திருந்தது. அந்த வகையில் ஒருவராக இருந்து வந்த சுரேஷ் சக்கரவர்த்திக்கு ரசிகர்கள் அதிகமாக கொடுத்த ஆதரவின் காரணமாகத்தான் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அந்த வீட்டிற்குள் பல கலகங்களையும் விறுவிறுப்பையும் அதிகரித்து அனைவரையும் ரசிக்க வைத்தவர். ஒரு சில நெட்டிசன்கள் இவரை கலாய்த்து தள்ளினாலும் கண்டுகொள்ளாமல் தற்போதும் கூட சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக வீடியோஸ் களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த வயதிலும் இவருடைய சுறுசுறுப்பை பார்த்த பல ரசிகர்கள் இப்படியே நீங்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி கொண்டிருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications