ஹிந்தி பிக் பாஸில் தமிழ் நடிகை.. ஸ்ருதிகா சொன்ன ஒரே வார்த்தை.. வியந்த இந்தியா: Bigg boss Hindi 18
சென்னை: தமிழ் நடிகை ஸ்ருதிகாவின் போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.. ஏகப்பட்ட பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை ஸ்ருதிகா பெற்று கொண்டிருக்கிறார்.. இதற்கு முன்பு அறிமுகமாகாதவர்களின் ஆதரவையும் பெற்று கொண்டிருக்கிறார்.. இதற்கு என்ன காரணம்?
நடிகை ஸ்ருதிகா.. நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.. அப்போதுதான் இவர், பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பதே தமிழக மக்களுக்கு தெரியவந்தது.

தோல்விப்படங்கள்: இந்த ஸ்ரீ படமும் சரி, இதற்குபிறகு வந்த ஆல்பம்,, தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் எதுவுமே வெற்றிப்படமாக அமையாத நிலையில், முன்னணி நடிகை என்ற இடத்தையும் ஸ்ருதிகாவினால் தக்க வைக்க முடியவில்லை.. திருமணம், குழந்தை, குடும்பம் என்று ஒதுங்கிவிட்ட நிலையில், திடீரென விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தலைகாட்ட துவங்கினார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்ருதிகா பங்கேற்றிருந்தபோது, இவரது மழலை பேச்சை கண்டு தமிழக மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.. சிலர் ரசித்து பார்த்தார்கள்.. சிலர் கிண்டல் செய்தார்கள்.. சிலர் "அஞ்சலி பாப்பா" என்று நக்கலடித்தார்கள். இதற்கு பிறகு பல டிவி ஷோக்களில் ஸ்ருதிகா கலந்துகொண்ட பிறகுதான், அவரது இயல்பான பேச்சே அப்படித்தான் என்பது அனைவருக்கும் புரியவந்தது.
பிக்பாஸ்: தமிழிலேயே இப்படியென்றால், இப்போது ஹிந்தியில் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.. இந்த பிக்பாஸை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.. ஸ்ருதிகா பேச துவங்கிய முதல்நாளே, சல்மான் கான் ஆச்சரியப்பட்டு போனார்.. ஸ்ருதிகாவின் ஒவ்வொரு பேச்சுக்கும் விழுந்துவிழுந்து சிரித்தார்..
தன்னையும் மீறி, ஒன்றிரண்டு வார்த்தைகளில் தமிழில் பேசிவிடுகிறார் ஸ்ருதிகா.. பிறகு, உடனே அதற்கும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறார்.. பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் சிலருக்கு, தமிழ்ப்பட வசனங்களையும், தமிழ் வார்த்தைகளையும் கற்று கொடுக்கிறார்.
இயல்பான பேச்சு: வெகுளித்தனமான பேச்சு, வெளிப்படையான பேச்சு, நகைச்சுவையான பேச்சு, பந்தா இல்லாத இயல்பான பேச்சு என தன்னுடைய பேச்சுக்கள் மூலம் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் இப்போது தன் பக்கம் திருப்பிவிட்டார் ஸ்ருதிகா. இது சம்பந்தமான வீடியோக்கள், ரீல்ஸ்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன..
ஆனால், வடமாநில மக்களால் ஸ்ருதிகாவின் பேச்சையும், அணுகுமுறையையும் உடனடியாக ஏற்க முடியவில்லை.. "ஓவர் ஆக்டிங், இந்த பெண் ஏன் இப்படி நடிக்கிறார்?" என்றெல்லாம் கமெண்ட்களை அள்ளி வீசினார்கள்.. ஆனால், நம்முடைய தமிழக ரசிகர்கள், வடமாநில ரசிகர்களின் கமெண்ட்களுக்கு தேடித்தேடி பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.
விமர்சனங்கள்: "எங்கள் ஸ்ருதிகாவின் இயல்பே இப்படித்தான்" என்று விளக்கம் கூறி எதிர்மறை விமர்சனங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து கொண்டிருக்கிறார்கள்.
எனினும், தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதால், பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருசிலர் ஸ்ருதிகாவை அவருக்கே தெரியாமல் கிண்டலடிக்கவும் செய்கிறார்களாம்.. அதிலும், தமிழில் தன்னையும் அறியாமல் பேசிவிடும்போது, கமெண்ட் அடித்து சிரித்து விடுகிறார்களாம். அப்போது லேசாக ஸ்ருதிகாவின் முகம் மாறிவிடுகிறது. எனினும், எல்லா விமர்சனங்களையும் தன்னுடைய வெகுளித்தனமான பேச்சால் உடைத்து விடுகிறார்.. அந்தவகையில், இந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் கன்டென்ட் தரக்கூடிய முக்கிய நபராக ஸ்ருதிகா விளங்கி வருகிறார்.
கிண்டல், கேலி: எனினும், ஸ்ருத்திகா கணவர் சமீபத்தில் வருத்தத்துடன் ஒரு பதிவு போட்டிருந்தார்.. அங்குள்ள சிலர் அவரை கிண்டல் செய்கிறார்களாம். இவையெல்லாம் பார்க்கும் போது ஸ்ருத்திகாவிற்கு வருத்தமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.. இது தொடர்பான வீடியோவை ஸ்ருத்திகாவின் சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவரது கணவர்.
"ஸ்ருத்திகா நிமிர்ந்து நிற்கிறார். அவளுடைய தமிழ் வேர்கள் அவளுடைய பலம், அவளுடைய வரம்புகள் அல்ல. உண்மையான சக்தியும் வலிமையும் நீங்கள் இருக்கும் நபரை சொந்தம் ஆக்குவதில் உள்ளது. அவள் நிச்சயமாக நம் அனைவரையும் பெருமைப்படுத்துகிறாள்" என்று பதிவிட்டிருந்தது, இணையத்தில் வைரலானது.
வரவேற்பு: ஒருவேளை தமிழில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக ஸ்ருதிகா சென்றிருந்தால் இந்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பு இருந்திருக்குமா தெரியாது. இப்போது இந்தி பிக்பாஸை பார்த்ததுமே, தமிழ் பிக் பாஸில் கலந்து கொள்ளாமல் போய் விட்டாரே என்று வெளிப்படையாக சொல்ல துவங்கியிருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.
அந்தவகையில், துளிகூட நடிப்பு இல்லாமல், தன்னுடைய யதார்த்தமான பேச்சால் இந்திய ரசிகர்களின் கவனத்தையே தன்பக்கம் குவித்து வருகிறார் தமிழகத்தின் ஸ்ருதிகா...!!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications