ஹிந்தி பிக் பாஸில் கலக்கும் ஸ்ருதிஹாவிற்கு ரசிகையான பாலிவுட் நடிகை.. இப்படி சொல்லிட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த ஸ்ருதிஹா ஹிந்தி பிக்பாஸ் 18 இல் போட்டியாளராக இருக்கிறார். அவரிடம் கடந்த வாரம் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மல்லிகா ஷெராவத் தான் ஸ்ருதிஹாவின் ரசிகையாகி விட்டேன் என்று அவரை பாராட்டி இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் அதிகமாக ஸ்ருதிஹாவின் வீடியோக்களும் அவரைப் பற்றிய செய்திகளும் தான் அதிகமாக காணப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய நடிகை ஸ்ருதிஹா அதே கலகலவென பேச்சுடன் ஹிந்தியில் பேசிக் கொண்டிருக்கிறார். ஆமாங்க ஹிந்தி பிக் பாஸ் 18 ஆவது சீசனில் போட்டியாளராக ஸ்ருதிஹா கலந்து கொண்டிருக்கிறார். நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிஹா முதல் தமிழ் கண்டஸ்டண்ட் என்ற பெருமையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

நடிகர் சூர்யாவோடு ஸ்ரீ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ருதிஹா நளதமயந்தி, தித்திக்குதே என்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் தன்னுடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் நடிப்பை விட்டு விலகி அர்ஜுன் என்ற பிசினஸ்மேனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

குடும்பத்தை கவனித்தபடியே அழகு சாதனங்கள் பொருட்கள் தயாரிக்கும் பிசினஸையும் சக்சஸ் ஆக செய்து கொண்டிருக்கும் ஸ்ருதிஹா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆனார். ஸ்ருதிஹாவின் அம்மா பஞ்சாபி என்பதால் ஸ்ருதிஹாவிற்கு ஹிந்தி சரளமாக தெரியும். ஆனாலும் என்ன தான் இவர் ஹிந்தி வேக வேகமாக பேசினாலும் சில இடங்களில் "சும்மா", "பாவம்" என்ற தமிழ் வார்த்தைகளையும் சொல்லிவிட்டு பிக் பாஸ் இடம் சிக்கிக் கொள்கிறார்.

ஸ்ருதிஹாவின் குழந்தைத்தனத்தை நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்தின் "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற டயலாக்கை சொல்லி கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாவிற்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அவர் அடிக்கடி தமிழ் பேசுகிறார் என்பதால் இது பிரச்சனை ஆகுமா? இதனால் நிகழ்ச்சிகளில் இருந்து இவர் வெளியேற்றப்படுவாரா என்றும் கேள்விகள் எழுந்து வந்தாலும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய பர்பாமன்ஸை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

தன்னை பற்றி கேலி செய்யும் போட்டியாளர்களிடம் கூட முகத்துக்கு நேராக நீங்கள் என்னை கேலி செய்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். கிண்டல் செய்வதற்கும் ஒருவரை அவர்கள் இல்லாத நேரத்தில் முதுகுக்கு பின்னாடி கேலி செய்வதற்கும் உள்ள வித்தியாசம் எனக்கு தெரியும். நான் எப்போதும் சிரித்துக் கொண்டே ஜாலியாக எல்லாவற்றையும் கடந்து போவேன். ஆனால் யாரையும் கேலி செய்யாதீர்கள்.

அடுத்தவர்களிடம் இயல்பாக சிரித்துக் கொண்டிருங்கள் அதுவே போதும் என்று கேலி செய்தவர்களுக்கு நச்சென்று பதிலடி கொடுத்திருக்கிறார். தமிழில் பலருக்கும் பரீட்சயமாகி இருந்தாலும் இவர் பாலிவுட்டில் இப்போது புதிய முகம் தான். இவருடைய இயல்பான கலகலப்பு, வெளிப்படையான அப்பாவி பேச்சும் ஆரம்பத்தில் பலர் விமர்சித்து வந்தாலும் இப்போது அதையே பலர் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர்களை போலவே கடந்த வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த நடிகை மல்லிகா ஷெராவத்தும் ஸ்ருதிஹாவிற்கு ரசிகையாக மாறிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். கடந்த வாரத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கும் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பிக் பாஸ் ஹிந்தி 18 வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மல்லிகா ஷெராவத் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கான் ஸ்ருதிஹாவிடம் உங்க கணவர் பாலிக்கு போய்விட்டார் என்று காமெடியாக சொன்னது போலவே மல்லிகாவும் சொல்லியிருந்தார். அதைக் கேட்டு சில நிமிடம் திகைத்து போன ஸ்ருதிஹா பிறகு நீங்க பிராங்க் பண்றீங்க என்னுடைய புருஷனுக்கு அந்த தைரியம் எல்லாம் கிடையாது என்று கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோஸ் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+