பிக் பாஸ் வீட்டில் உருவான காதல் இரண்டு வருடத்தில் முறிந்தது.. சீரியல் நடிகை கொடுத்த விளக்கம்?
சென்னை: ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கும் காதல் ஏற்படுவது சகஜம் தான். அந்த மாதிரி தான் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக இருக்கும்போது இரண்டு பிரபலங்கள் காதலித்து வந்த நிலையில் அவர்களுடைய காதல் வாழ்க்கை இரண்டு வருடங்கள் கழித்து இப்போது பிரிந்து விட்டது என்று கூறி இருக்கின்றனர்.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழைப் போலவே பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை போல இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14வது சீசனில் கலந்து கொண்ட நடிகர் ஐஜாஸ் கான் மற்றும் பவித்ரா போனியா இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலர்களாக மாறி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் காதலர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர்.

தமிழில் பாவணி மற்றும் அமீர் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக காதலர்கள் ஆக மாறி இப்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்களோ அதுபோலத்தான் நடிகர் ஐஜாஸ் கான் மற்றும் பவித்ரா போனியா இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது தங்களுடைய காதல் முறிந்து விட்டது என்று இவர்கள் சொல்லி இருக்கும தகவல் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்து வரும் ரசிகர்களுக்கு சில விஷயங்கள் தெரிந்திருக்கும். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலிக்கும் பிரபலங்கள் வெளியே வந்து அந்த காதலை தொடர்வது கிடையாது. உள்ளிருக்கும் போது அவர்கள் கண்டெண்டுக்காகவும் ஒரு ஈர்ப்பின் காரணமாகவும் காதலித்து வந்தாலும் வெளியே வந்து அதை தொடர்வது கிடையாது.
ஆனால் இந்தி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது டிவி நடிகை பவித்ரா மீது ஐஜாஸ் கானுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் இவர்களுடைய காதல் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் தொடர்ந்தது. இரண்டு வருடங்களாக காதலித்து வந்தார்கள். ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17வது சீசனும் நடந்து முடிந்துவிட்டது ஆனால் ஐஜாஸ் பவித்ராவின் காதல் முடியவில்லை என்று இவர்களுடைய ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர்.
இப்படியான நிலையில் தான் அவர்களுடைய ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். காரணம் மும்பையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இந்த பிரபலங்கள் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்து இருக்கின்றனர். அப்போது பவித்ராவோடு தங்கி இருந்த வீட்டில் இருந்து ஐஜாஸ் வெளியேறி விட்டாராம். ஆனால் பவித்ரா இன்னும் அந்த வீட்டில் தான் வசிக்கிறாராம்.
அதோடு ஐஜாஸ் கானும் பவித்ராவும் பிரிந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டதாம். ஆனால் தற்போது தான் இந்த விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஐஜாஸை பிரிந்தது குறித்து பவித்ரா உறுதி செய்து இருக்கிறார். அதோடு அவர் எதுவும் நிரந்தரமில்லை என்பது உறவுக்கும் பொருந்தும். சில மாதங்களுக்கு முன்பு நானும் ஐஜாஸூம் பிரிந்துவிட்டோம். அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் ஆனால் எங்களின் உறவு நீடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து ஐஜாஸ் கான் கூறியிருப்பதாவது, பவித்ரா வாழ்வில் காதலும் வெற்றியும் கிடைக்கும் என நம்புகிறேன். அவருக்காக நான் எப்போதும் பிரார்த்தனை செய்வேன்... என்று அவர் கூறியிருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications