Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss Hindi 18: வெளியே போ என திட்டிய ஆண் போட்டியாளர்.. கெத்தா அடிச்சு நாக் அவுட் செய்த ஸ்ருதிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ஹிந்தி சீசன் 18ல் கலந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிகா நேற்று அங்கிருக்கும் அவினாஷ் என்ற போட்டியாளரோடு சண்டை போட்ட வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த போட்டியாளர் ஸ்ருதிகாவை வெளியே போ என்று சொல்ல அதற்கு தனி ஆளாக கெத்தாக எதிர்த்து நின்று பதிலடி கொடுத்து இருக்கிறார்.

தமிழ் நடிகையான ஸ்ருதிகா ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவர் பெரிய அளவில் பிரபலமடைந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் தான் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்ற ரகசியத்தையும் உடைத்து இருந்தார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அந்த நிகழ்ச்சியில் அவரின் பேச்சும் சேட்டையும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரசிக்க வைத்தது. மூன்றாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்று இருந்தார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தனர். இந்த பிரபலத்தோடு பிக் பாஸ் ஹிந்தியில் 18வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

தென்னிந்தியாவிலிருந்து ஹிந்தி பிக் பாஸில் கலந்து கொண்ட முதல் நடிகை என்ற அந்தஸ்தையும் இவர் பெற்றிருக்கிறார். ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் நாள் மேடையில் சல்மான் கான் முன்பு நான் நான்கு படங்களில் நடித்தேன். நான்கு படமும் பக்கா பிளாப் என்று இவர் சொன்னது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.

அதற்கு காரணம் சல்மான் கான் இவரை தமிழில் ஒரு பிரபலமான சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று அடையாளப்படுத்தியதும் நான் அதுமட்டுமல்ல சினிமாவிலும் நடித்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு 4 படங்களில் நடித்தேன் அது எல்லாமே பிளாப்பாகிவிட்டது என்று சொல்லி இருந்தார்.

இவர் உண்மையாகவே இப்படித்தான் பேசுவாரா? அல்லது இந்த நிகழ்ச்சியில் இப்படி ஓவராக சீன் போடுகிறாரா என்று பலர் கமெண்ட் கொடுத்து வந்தனர். ஆனால் அதற்கு பிறகு அந்த நிகழ்ச்சியில் இவருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டது. காபிக்காக அழுது கொண்டு இருந்தது, கணவர் குறித்து எல்லா இடங்களிலும் பேசிக்கொண்டிருந்தது போன்றவை ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பாசிட்டிவ் இமேஜ் உருவாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் தான் நேற்று ஒரு சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. அதாவது நேற்று ஒரு டாஸ்க் நடைபெற்றிருக்கிறது. அதில் அங்கு இருக்கும் ஒரு போட்டியாளரான அவினாஷ் என்பவரை சமாதானம் செய்ய வேண்டும். அப்படி சமாதானம் செய்தால்தான் இந்த வாரத்திற்கான உணவு எல்லோருக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அதில் அவினாஷ் சமாதானம் செய்வதற்காக வீட்டில் இருக்கும் எல்லா போட்டியாளர்களும் தாங்கள் ரொம்பவும் விரும்பி பாதுகாத்து வந்த பொருட்களை சாக்ரிஃபைஸ் செய்தனர். அப்போது அங்கிருக்கும் ஒரு போட்டியாளர் தன்னுடைய கணவர் தனக்குப் கொடுத்த மோதிரத்தை அங்குள்ள தீயில் போட்டு இருந்தார்.

அதுபோல இன்னொரு பெண் தன்னுடைய அம்மாவின் துப்பட்டாவை தீயில் போட்டு இருந்தார். இன்னொரு பெண் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு எடுத்த புகைப்படத்தை போட்டு இருந்தார். அப்போது ஸ்ருதிகா தன்னுடைய கணவர் தனக்காக கொடுத்து அனுப்பிய காபி பவுடர் ஒன்றை தான் எதற்காகவும் உனக்கு தரமாட்டேன்.

நான் இதை இழந்து உன்னை திருப்தி படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கோபமாக பேசி இருந்தார். அதற்கு அவினாஷ் கெட் அவுட் நீ வெளியே போ என்று திட்ட அதற்கு ஸ்ருதிகா அதை சொல்ல உனக்கு உரிமை இல்லை என்று சண்டை போட்டு இருந்தார். இந்த ப்ரோமோ வைரல் ஆகி வருகிறது. தேவையில்லாமல் சண்டை போட்டால் நான் சிரித்துக் கொண்டிருக்க மாட்டேன் அதற்கு பதிலடி கொடுப்பேன் என்று அந்த ப்ரோமோவில் ஸ்ருதிகா கெத்தாக பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+