ஹிந்தி பிக் பாஸில் ஸ்ருதிஹா பேசிய தமிழ் வார்த்தை.. அடுத்து நடந்த ட்விஸ்ட்! கொண்டாடும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதை போலவே ஹிந்தியில் பிக் பாஸ் 18 ஆவது சீசனில் தமிழ் நடிகை ஸ்ருதிஹா அங்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் நேற்று போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தமிழில் பேசிய ஒரு வார்த்தை பேசியிருக்கிறார்.அது இப்போது இணையத்தில் கருத்துக்களை பெற்று வருகிறது.

கடத்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள்தான் இருக்கிறார்கள். 18 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அதில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள். ஆனாலும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவி ப்ராடக்ட் இல்லாத நடிகை சாச்சிகா முதல் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டு இருந்தார்.

television bigg boss tamil 8 bigg boss 8

இந்த சீசனில் போட்டியாளர்கள் அதிகமாக இந்த திரையை சார்ந்தவர்களாக இருப்பதால் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்களாக இருந்தாலும் பிக் பாஸ் முதல் எலிமினேஷன் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து போட்டியாளர்களுக்குள் சண்டை சச்சரவுகள் தான் அதிகமாக இருக்கிறது. இன்று வெளியான ப்ரோமோவில் கூட முதல் ப்ரோமோவில் விஜே விஷால் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். இரண்டாவது ப்ரோமோவில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் கைகலப்பு வரைக்கும் போயிருக்கின்றனர்.

மன வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள் மனதை கூலாக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்து விடவே கூடாது என்று சொல்லும் வகையில் தான் இந்த நிகழ்ச்சியில் காதைக் கிழியும் வரைக்கும் கத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் 18 வது சீசன் ஜாலியாக எல்லோரையும் என்டர்டைன்மென்ட் செய்து கொண்டிருக்கிறது.

bigg boss tamil 8 bigg boss 8

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவது போல ஹிந்தியில் கலர்ஸ் சேனலில் பிக் பாஸ் ஹிந்தி 18 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழ் நடிகையான ஸ்ருதிஹா அர்ஜுன் கலந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ திரைப்படத்தின் மூலமாகத்தான் வெள்ளி திரையில் அறிமுகமானார். பள்ளி படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நான்கு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் நான்கு திரைப்படமும் பிளாப் ஆகிவிட்டதால் சினிமா நமக்கு செட்டாகாது என்று சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனத்தை செலுத்தி இருந்தார். அதற்குப் பிறகு காதலித்து திருமணம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் குக்காக வந்திருந்தாலும் அதிகமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

bigg boss tamil 8 bigg boss 8

இவரை சின்னத்திரை ஜெனிலியா என்று ரசிகர்கள் கொண்டாடினர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எப்படி கலகலவென ஜாலியாக பேசிக்கொண்டே இருந்தாரோ அதுபோல ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பேசிக் கொண்டே இருக்கிறார். முதல் நாள் இவர் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகும்போது அந்த ப்ரோமோவுக்கு கீழே அதிகமான ரசிகர்கள் இவரை திட்டி இருந்தனர்.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இவர்தான் அங்கு கண்டன்ட்டாக மாறி இருக்கிறார். இவர் அதிகமான ப்ரோமோகளில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். யார் சோகமாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி அங்கு சென்று பிகு பண்ணாமல் இயல்பான காமெடி மூலம் அவர்களுடைய மனதை மாற்றி விடுகிறார். அதனால் ரசிகர்கள் இவரை பாராட்டி வருகிறார்கள். இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம் என்று சொல்லி வருகிறார்கள்.

television bigg boss tamil 8 bigg boss 8

நேற்று கூட தன்னுடைய சகப்போட்டியாளர்களுடன் ஸ்ருதிஹா பேசிக் கொண்டிருக்கும்போது பிக் பாஸ் ஸ்ருதிகா என்ன பண்ணுறீங்க என்று கேட்க, "சும்மா" பேசிகிட்டு இருக்கோம் பிக் பாஸ் என்று அவர் தமிழில் சொல்லிவிடுகிறார். உடனே பிக் பாஸ் என்னது சும்மாவா? என்று ஹிந்தியில் கேட்க, அதற்கு ஸ்ருதிகா சிரித்தப்படியே சும்மா என்பதற்கு என்ன அர்த்தம் என்று ஹிந்தியில் அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் தமிழ் பிக் பாஸ்க்கு ஸ்ருதிஹா வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து கூறி வருகிறார்கள். இவர் அங்கு டைட்டில் ஜெயிக்கப் போகிறாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம் இதுவரைக்கும் ஹிந்தி பிக்பாஸில் ஒரு தமிழ் நடிகைகள் கூட கலந்து கொண்டது கிடையாது. இவர்தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+