ஹிந்தி பிக் பாஸில் சல்மான்கான் கேட்ட கேள்வி.. பதறிப்போன ஸ்ருதிகா.. இதெல்லாம் ரொம்ப ஓவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹிந்தியில் பிக் பாஸ் 18வது சீசனில் போட்டியாளராக இருக்கும் ஸ்ருதிஹா கடந்த வாரத்தில் நாமினேஷனில் இருந்தார். கடைசி நேரத்தில் அவர் வாக்குகளின் அடிப்படையில் சேவ் ஆகி இருக்கும் நிலையில் சல்மான் கான் ஸ்ருதிஹாவிடம் கேட்ட கேள்விக்கு ஸ்ருதிஹா அதிர்ச்சியாகி இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக இருக்கும் ஸ்ருதிகாவிற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அவருக்கு ஆரம்பத்தில் ஹிந்தி ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட் கொடுத்து வந்தனர் ஆனால் இப்போது அவரால் அந்த நிகழ்ச்சி சுவாரசியமாக போகிறது என்று அவருக்கு பாசிட்டிவ் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். எப்போதும் வழவழவென பேசிக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹா கடந்த வாரத்தில் அந்த நிகழ்ச்சியில் அதிகமாக அழுது கொண்டிருந்தார். இது பார்க்கும் ரசிகர்களை ரொம்பவே ஃபீல் பண்ண வைத்தது.

bigg boss tamil 8 bigg boss 8 8

ஸ்ருதிஹா ஸ்ரீ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அடுத்தடுத்து அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. அதனால் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி வந்த நிலையில் படிக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தன்னுடைய பிசினஸை கவனித்து வரும் ஸ்ருதிகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலையும் வெற்றி பெற்றுவிட்டார். அந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவானர்.

bigg boss tamil 8 bigg boss 8 8

இணையத்தில் படும் பயங்கர பிசியாக இருக்கும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால் தமிழில் இல்லை ஹிந்தியில் தான். தமிழில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிலையில் இவர் இங்கிருந்து மிஸ் ஆனது அதிசயம் தான்.

ஹிந்தியில் இவர் நடவடிக்கையை பார்த்து முதல் நாள் திட்டிய ரசிகர்கள் நாட்கள் செல்ல செல்ல இவரை புரிந்து கொண்டனர். வீட்டுக்குள் எப்போதும் சக போட்டியாளர்களிடம் தன்னுடைய கணவர் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நாள் என்னுடைய கணவர் இப்போ பாங்காவுக்கு ஜாலியாக கிளம்பி இருப்பார் என்று சொல்லியிருந்தார்.

bigg boss tamil 8 bigg boss 8 8

அதற்கு சக போட்டியாளர் ஒருவர் பாங்கில் பெண்களோடு ஜாலியாக இருப்பதற்காகத்தான் போவார்கள் உங்கள் கணவரும் அப்படித்தான் போயிருக்கிறாரா? என்று கிண்டல் செய்ய, அதற்கு ஸ்ருதிஹா பதறிப் போயிருந்தார். அப்படி என்றால் அர்ஜுன் அங்கே போகக்கூடாது என்று சொல்லி இருந்தார். அது குறித்து வார இறுதி நாளில் சல்மான் கான் ஸ்ருதிஹாவிடம் கிண்டல் செய்து இருந்தார்.

கடந்த வாரத்தில் ஸ்ருதிஹா எலிமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்திருந்தார். அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சாப்பாடு காபி இல்லை என்று ஸ்ருதிஹா அழுது கொண்டிருந்தது பெரிய அளவில் வைரல் ஆனது. காபிக்காக அழுத வீடியோவை அவருடைய கணவர் அர்ஜுன் பகிர்ந்து ஸ்ருதிஹாவை கிண்டல் செய்து இருந்தார்.

bigg boss tamil 8 bigg boss 8 8

அப்போது எனக்கு சாப்பாடு சரியா இல்ல, காபி கிடைக்கல என்பதால் பாத்ரூம் செல்ல முடியவில்லை என்று பேசி இருந்தார். அதை நேற்றைய எபிசோடில் சல்மான்கான் இங்கே மனம் சுத்தமா இல்லை என்றாலும், வயிறு சுத்தமாய் இருக்கணும் என்று பேசியிருந்தார். இதை கேட்ட போட்டியாளர்கள் எல்லோரும் சிரிக்க அதற்கு ஸ்ருதிகாவோ அச்சச்சோ அதை நீங்க பாத்துட்டீங்களா? ஏன் சார் பார்த்தீங்க என்று சிரித்துக் கொண்டே கேட்டிருந்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+