ஹிந்தி பிக் பாஸில் ஸ்ருதிகாவிற்கு அநீதி? திடீர் வெளியேற்றத்துக்கு காரணம்? மொத்த சம்பளம் இவ்வளவா?
சென்னை: பிக் பாஸ் ஹிந்தி சீசன் 18ல் போட்டியாளராக சென்ற ஸ்ருதிகா நேற்று மிட் நைட் எவிக்ஷன் ஆகி வெளியே வந்திருக்கிறார். அவர் வாங்கிய சம்பள விவரங்கள்? அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்ற விபரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
தமிழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் பதினெட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இப்போதுதான் 8வது சீசன் வந்திருக்கிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அதுபோல இதுவரைக்கும் ஹிந்தி பிக்பாஸில் எந்த தமிழ் நடிகையும் கலந்து கொண்டது கிடையாது. முதல் முறையாக நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டார். இவர் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
அந்த ஹிந்தி பிக் பாஸில் ஆரம்பத்திலிருந்து எல்லோரும் வியக்க வைக்கும் போட்டியாளராக ஸ்ருதிகா இருந்தார். ஹிந்தி பிரபலங்களுக்கு மத்தியில் தனி ஆளாக சிங்க பெண்ணாக இவர் ஜொலித்துக் கொண்டிருந்தார். சில நேரங்களில் இவர் துவண்டு போகும்போது பார்த்த ரசிகர்கள் இவருக்காக ஃபீல் பண்ணி வந்தனர். காரணம் தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்ருதிகா எவ்வளவு ஜாலியான கேரக்டர் என்று எல்லோருக்கும் தெரியும்.
இவர் குக்காக வந்தாலும் கோமாளியை விடவும் ஜாலியாக சிரித்துக்கொண்டே, அடுத்தவர்களை கிண்டல் செய்து கொண்டும் இருப்பார். தன்னை எவ்வளவு ட்ரோல் செய்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் இருந்த ஸ்ருதிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலமுறை அழுது இருக்கிறார். ஒருமுறை நான் வீட்டிற்கு போகவேண்டும் என்று கதறி அழுதது பார்க்கும் ரசிகர்களையும் பதற வைத்திருந்தது.
இப்படியான நிலையில் இவர் எப்படியாவது பைனலுக்கு போவார் என்று தமிழ் ரசிகர்கள் நினைத்திருந்தனர். அதுபோல ஹிந்தி ரசிகர்களும் இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். ஆனால் இவருடைய நண்பர்கள் சிலருடைய சதியால் இவர் கடைசி வாரத்தில் நாமினேஷனுக்கு வந்தார்.
கடந்த வாரத்தில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது அதாவது மூன்று அணியாக பிரிந்து அங்கு இருப்பவர்களை எலிமினேஷனுக்காக நாமினேஷன் செய்ய சொல்லி இருந்தார்கள். அதில் ஸ்ருதிகாவை அவருடைய நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களே நாமினேஷன் செய்தனர். இதற்கு முன்பு அவருடைய தோழியான சும் மற்றும் கிரணுக்காகவே ஸ்ருதிகா நாமினேஷனுக்கு வந்தார்.
ஆனாலும் அவர்கள் ஸ்ருதிகாவை நெருங்கிய தோழியாக நினைக்கவே இல்லை என்பது இந்த வாரத்தில் தெரியவந்தது. அது போல இந்த வாரத்தில் தமிழ் பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வாக்கு கேட்டிருந்தனர். ஆனாலும் அவருக்கு வாக்குகள் குறைவாக இருந்ததால் நேற்று அவர் மிட்நைட்டில் எவிக்ஷன் செய்யப்பட்டிருந்தார்.
அதற்கு முக்கிய காரணம் அவருடைய நண்பர்கள்தான். அதே நேரத்தில் ஸ்ருதிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் 90 நாட்களை கடந்து இருக்கிறார். அதற்காக அவர் வாங்கிய சம்பள விபரமும் வெளியாகி இருக்கிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகா கலந்து கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு 6 முதல் 8 லட்சம் வரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications