ஹிந்தி பிக் பாஸ்க்கு வார்னிங் கொடுத்த ஸ்ருதிஹா.. கணவருக்கு வந்த மிரட்டல் வீடியோ.. எதிர்பாராத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ஹிந்தி 18 ஆவது சீசனில் போட்டியாளராக இருக்கும் ஸ்ருதிஹா நேற்றைய எபிசோடில் பிக்பாஸுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அப்போது தன்னுடைய கணவர் குறித்து மிரட்டலாக ஸ்ருதிஹா பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட அதே அக்டோபர் ஆறாம் தேதி தான் ஹிந்தியில் 18வது சீசன் தொடங்கப்பட்டது. தமிழில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். 18 பேரில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள் தான். இதனாலயோ என்னவோ விஜய் டிவி பிரபலமான ஸ்ருதிஹா தமிழுக்கு டா டா சொல்லிவிட்டு ஹிந்தியில் களமிறங்கி விட்டார்.

bigg boss tamil 8 bigg boss 8 8

ஸ்ருதிஹா ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து அதற்கு முன்பு எந்த அறிவிப்பும் ரசிகர்களுக்கு வெளியிடாமல் இருந்த நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதே நாளில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் தனக்கு ஆதரவு தரும்படி ஒரு வீடியோ மட்டும் வெளியிட்டு இருந்தார்.

இதை பார்த்ததும் ரசிகர்கள் இவர் ஹிந்தியில் எப்படி சமாளிக்க போகிறார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். காரணம் தமிழ் போல ஹிந்தியில் கிடையாது அங்கு பல டாஸ்க்குகள் ரிஸ்க்காக இருக்கும். இங்கு 18 போட்டியாளர்கள் தமிழில் கலந்து கொண்டனர். ஆனால் ஹிந்தியில் ஒரு கழுதையும் சேர்த்து போட்டியாளராக முதல் வாரமே இறக்கி விட்டார்கள்.

அந்த கழுதையை மற்ற போட்டியாளர்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் டாஸ்க் கொடுத்து இருந்தனர். அந்த கழுதைக்கு தேவையான உணவு, குளிப்பாட்டுவது, பராமரிப்பது என எல்லா வேலைகளையும் மற்ற போட்டியாளர்கள் தான் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இப்படி அங்கு பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் போது ஹிந்தி பிக் பாஸில் கலந்து கொண்ட முதல் தமிழ் நடிகை என்ற பெயரோடு ஸ்ருதிஹா அங்கு கலக்கி கொண்டு இருக்கிறார். முதல் நாள் அவரை விமர்சித்த ரசிகர்கள் கூட இப்போது நாட்கள் செல்ல செல்ல அவருக்கு அதிகமான பாசிட்டிவ் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

இப்படியான நிலையில் தான் நேற்று எபிசோடில் ஸ்ருதிஹா பேசியது வைரலாகி வருகிறது. அதில் பிக் பாஸ் கன்சல் ரூமில் தன்னுடைய கணவருக்கு சில மெசேஜ் சொல்ல வேண்டும் அதுவும் தமிழில் சொல்ல வேண்டும் என்று ஸ்ருதிஹா வேண்டுகோள் வைக்க, பிக் பாஸ் அதற்கு சம்மதித்திருக்கிறார்.

அப்போது ஸ்ருதிகா, நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் வரைக்கும் நீ சென்னையை விட்டு வேறு எங்கேயும் போகக்கூடாது. அப்படி போனா கொன்னுருவேன் என்று மிரட்டி பேச அதை ஒவ்வொரு வார்த்தையாக ஸ்ருதிஹா சொல்ல சொல்ல பிக்பாஸ் சொல்லி இருக்கிறார்.

இதுவரைக்கும் இதுபோல பிக் பாஸ் தமிழில் பேசியது கிடையாது. எல்லா மொழிகளிலும் அவர்களுடைய மொழிகளில் தான் பேச வேண்டும் என்று விதி இருக்கிறது. தமிழில் கூட ஒரு சீசனில் ஒரு நடிகை மலையாளத்தில் பேசினார் என்று கமல்ஹாசன் கண்டித்து இருப்பார். ஆனால் ஹிந்தியில் பிக் பாஸ் ஸ்ருதிஹாவுக்காக தமிழில் பேசி இருப்பது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+