ஹிந்தி பிக் பாஸில் நடந்த செம சண்டை.. ஸ்ருதிகா செய்த கலவரம்.. ஒரு வழியா தலை தப்பியது
சென்னை: பிக் பாஸ் ஹிந்தி 18வது சீசனில் தமிழ் நடிகையாக கலந்து கொண்டிருக்கும் ஸ்ருதிஹாவிருக்கும் சக போட்டியாளர்களுக்கும் நேற்றைய எபிசோடில் சண்டை நடந்திருக்கிறது. அப்போது ஸ்ருதிகா துணிச்சலாக பேசியது பலராலும் பாராட்டப்படுகிறது.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய அதே அக்டோபர் ஆறாம் தேதி தான் ஹிந்தியிலும் 18 வது சீசன் தொடங்கப்பட்டது. தமிழ் பிக் பாஸில் விஜய் டிவி பிரபலங்கள் அதிகமானோர் கலந்து கொண்டிருக்கும் நிலையில் ஹிந்தியில் முதல்முறையாக தமிழ் நடிகையாக நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டார்.

இவர் ஆரம்பத்தில் இருந்த நிகழ்ச்சியில் நெகட்டிவ் கமெண்ட்கள் பெற்று வந்தாலும் இப்போது போக போக நல்ல பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்று இருக்கிறார். அதிலும் உள்ளே போட்டியாளர்களிடம் இவர் சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்கிறார், கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்படுகிறார்.
இருக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரை எப்போதும் கலகலப்பான ஒரு கேரக்டராக பார்த்த ரசிகர்களுக்கு இப்போதைய இவருடைய நிஜ கேரக்டர் வியப்பை கொடுத்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஹிந்தி பிக் பாஸில் சண்டை வேண்டுமா சண்டை இருக்கு.. காமெடி வேணுமா காமெடி இருக்கு, காதல் வேண்டுமா காதல் இருக்கு.. என்று எல்லாம் கலந்த கலவை இருக்கிறது.

அங்கு ஸ்ருதிகாவால் பல பிரச்சனைகளும் இருக்கிறது. ஆரம்பத்தில் ஸ்ருதிகாவிற்க்கும் விபின் என்ற போட்டியாளர்களுக்கும் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவரும் தான் அதிகமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில் கூட இருவருக்கும் இடையே சண்டை வெடித்திருக்கிறது.
அதாவது நாமினேஷன் டாஸ்க் நடைபெற்று இருக்கிறது. அப்போது ஸ்ருதிகாவை பற்றி அவர் பேசுகிறார். அப்போது ஸ்ருதிகா பாய்ண்டா பேசல எதற்கும் சுற்றி வளைத்து பேசுகிறார் என்று சொல்கிறார். அதற்கு தம்பி நீ என்ன பேசப்போறேன்னு எனக்கு தெரியும். நான் உங்கள மாதிரி ஆட்களிடம் அப்படித்தான் பேசணும்.

ஏன்னா உங்களுக்கு புத்தி இல்ல. மூளை மட்டும்தான் இருக்கு, அறிவு இல்லை என்று ஒரே போடு போட்டு இருக்கிறார். இதை எதிர்பார்க்காத விபின் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதுபோல இன்னொரு போட்டியாளர் உள்ளிருக்கும் இரண்டு போட்டியாளர்களுக்கு போர்வை கொடுக்கக்கூடாது அவர்கள் கீழே படுக்க வேண்டும் என்று பனிஷ்மென்ட் கொடுக்கிறார்.
அதற்கு ஸ்ருதிகா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். எப்படி நீங்க இப்படி சொல்ல முடியும்? போர்வை போத்தி படுக்க வேண்டியது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. அதையெல்லாம் மறுப்பதற்கு இங்கே யாருக்கும் உரிமை கிடையாது என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஸ்ருதிகா யாருக்காக சப்போர்ட் செய்தாரோ அதே போட்டியாளருடன் சில நிமிடங்களுக்கு முன்புவரைக்கும் சண்டை போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் நேற்று நடந்த இன்னொரு டாஸ்க்கில் சில போட்டியாளர்களை பிக் பாஸ் காப்பாற்றி இருக்கிறார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஸ்ருதிகா பெயரும் இருந்த நிலையில் கடைசியாக அவரும் இந்த வாரத்தில் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications