பிக் பாஸ் ஐசுவின் தங்கை 10th மார்க் இவ்வளவா? குடும்பத்தோடு செம கொண்டாட்டம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்
சென்னை: இன்று (மே 10, 2024) பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஐசுவின் சகோதரி அல்ஹேனாவும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார். அவர் பெற்ற மதிப்பெண்கள் குறித்து அவரை அவருடைய பெற்றோர் பாராட்டி இருக்கிறார்கள். அதோடு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் பத்தாம் வகுப்பு மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கிறது. அதில் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருக்கின்றனர். ஒரு சில மாணவர்கள் தாங்கள் நினைத்த மார்க்க கிடைக்கவில்லையே என்று வருத்தத்தில் இருக்கின்றனர்.

அதுபோல வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தகுந்தபடி என்ன படிப்பு படிக்க வைக்கலாம் என்று யோசனைகளும், குழப்பத்தோடும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சி பெற்றிருக்கிறது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 97.02%, அடுத்ததாக ராமநாதபுரத்தில் 96.36% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, திருச்சி, விருதுநகர், ஈரோடு, பெரம்பலூர், தூத்துக்குடி, விழுப்புரம் என்று முதல் 10 இடங்களுக்குள் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாவட்டங்கள் இடம் பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஐசுவின் சகோதரி ஐநூறு மதிப்பெண்களுக்கு 360 மதிப்பெண் பெற்றிருக்கிறார். தமிழில் 41 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 92ம், கணிதத்தில் 70 மதிப்பெண்களும், அறிவியலில் 83 மதிப்பெண்கள் மற்றும் சமூக அறிவியல் 74 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்ட இவருடைய குடும்பம் ஐசுவின் சகோதரி அல்ஹேனாவை கட்டி அணைத்து நாங்கள் இந்த மதிப்பெண்களை எதிர்பார்க்கவே இல்லை.
அவள் சொன்னது போலவே செய்து விட்டாள். அவர் டான்ஸில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தாலும் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்று தன்னுடைய மகளை பாராட்டி இருக்கிறார்கள். நாங்கள் எப்போதுமே அவளை அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. ஆனால் அவள் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்று சொன்னோம்.

அவள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுவிட்டார். அதுபோல எல்லோரும் கனவுகளை நோக்கி போவது தப்பு கிடையாது. ஆனால் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு ஐசுவின் தந்தை அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதை பிக் பாஸ் விசித்திரா முதலாக பல பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். அதோடு அல்ஹேனாவிற்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications