TTF வாசனை அடிக்க பாய்ந்த ஜேசன்.. வண்டியை வேற பக்கம் திருப்பிய விஜய் சேதுபதி.. ஆட்டமே மாறி போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜய் சேதுபதி என்ன சொல்லுவார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சனிக்கிழமை எபிசோடின் முதல் ப்ரோமா வந்தது. ஆனாலும் அதில் திருப்தியாக இல்லையே என்பதுதான் பலருடைய கருத்து. காரணம் இந்த வாரம் நடந்த சம்பவம் அப்படி. அதாவது ஜேசன் வாசனை அடிக்க போயிருந்தார். அதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கும் காட்சியை தான் ரசிகர்கள் எதிர்பார்த்தது.

ஆனால் நாங்க எதிர்பார்த்தது ஒன்னு நீங்க கொடுப்பது ஒன்னு என்று சொல்ற மாதிரி தான் இந்த வார ப்ரோமோ வந்திருக்கிறது. ஏதோ கொஞ்சம் உருப்படியாக விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். அதை நினைத்து ரசிகர்கள் மனசை தேத்திக்கோங்க. 2 நாட்களுக்கு முன்பு நடந்த வாக்கு வாதத்தின் போது தெரியாமல் ஜேசன் மூக்கில் விரல் பட்டு இருக்கிறது. அதற்கு கடுப்பான ஜேசன் வாசனை அடிக்க கையை ஓங்கி தள்ளி இருக்கிறார். அதை எதிர்பார்க்காத வாசனும் ஒரு நிமிடம் ஷாக் ஆகி விட்டு பிறகு அவரை தடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

இன்றைய எபிசோடு

அப்போது அங்கிருந்த போட்டியாளர்கள் இருவரையும் பிரித்து சண்டையை சமாதானம் செய்ய பார்த்தனர். ஆனாலும் அதெல்லாம் முடியாதுப்பா என்பது போலத்தான் ஜேசன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். அதனால் இந்த வாரம் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருந்தது. அது பற்றி இசையமைப்பாளரும் பிக் பாஸ் ரிவியூவருமான ஜேம்ஸ் வசந்த்ன் கூட ஜேசனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு இருந்தார்.

Bigg Boss Vijay TV Vijay Sethupathi

பிக் பாஸ் ப்ரோமோ

பலருடைய எதிர்பார்ப்பு விஜய் சேதுபதி முதல் ப்ரோமோவில் ரெட் கார்டை தூக்கி காட்டுவார் என்பது. ஆனால் நடந்தது வேறு. பிக் பாஸ் ஒரு வாரம் வரவில்லை என்றால் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் குரூப் சேர்ந்து கொண்டு, அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஒருவர் மீது ஒருவர் பழியை போட்டு, விளையாட்டை நாசம் பண்ணிட்டாங்க என்பது போல பேசி இருக்கிறார். ஏற்கனவே ஒருமுறை வாசன் இதுபோல முகேஷை தள்ளி விட்டிருந்தார்.

டிடிஎஃப் வாசனுக்கு வார்னிங்

அப்போது வாசனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று பலரும் சொல்லி வந்தனர். அந்த சமயத்தில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் அந்தவாரம் சிறப்பு தொகுப்பாளராக வந்திருந்தார். அவர் வாசனுக்கு வார்னிங் கொடுத்திருந்தார். இதுதான் உங்களுக்கு முதலும், கடைசி முறை. அடுத்ததாக நீங்கள் இதுபோன்று நடந்து கொண்டால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்பது போலவே அவர் சொல்லி இருந்தார்.

ரசிகர்களை கண்டுகொள்ளாத ஜேசன்

அதற்கு பிறகு வாசன் தனது கோபத்தை சில இடங்களில் கட்டுப்படுத்தி இருக்கிறார். ஆனால் ஜேசன் எப்போதுமே ரசிகர்களையும் மதிப்பதில்லை, எனக்கு ரசிகர்கள் ஓட்டு போட வேண்டிய அவசியமே இல்லை என்பது போல சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் திங்கள்கிழமையானால் ரசிகர்களிடம கெஞ்சி பேசுகிறார். அதுபோல உள்ளிருக்கும் போட்டியாளர்களிடமும் விதண்டாவதம் செய்து கொண்டிருக்கிறார். அதனாலயே சக போட்டியாளர்கள் எல்லோரும் இவர் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.

ஆனால் அதை எல்லாம் ஜேசன் கண்டு கொள்வதே இல்லை. ஒருவிதத்தில் இவர் இப்படி நடந்து கொள்வது கூட நிகழ்ச்சிக்கான சுவாரசியத்தை கூட்டுது என்று இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த வாரம் எபிசோடில் விஜய் சேதுபதி என்ன தான் சொல்லப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+