பிக் பாஸ் ஜூலிக்கு இவரோடு தான் திருமணமா? கதையில் ஏற்பட்ட ட்விஸ்ட்..அவரே வெளியிட்ட புகைப்படம்
சென்னை: நடிகை ஜூலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அந்த சீரியலின் கதாநாயகன் வினோத் பாபுவோடு திருமண கோலத்தில் ஜூலி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலம் அடைந்திருந்தனர். ஆனால் ஜூலியை யாராலும் மறக்க முடியாது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பு ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்ததை விடவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேற லெவலில் பிரபலம் அடைந்து விட்டார். ஆரம்பத்தில் அதிகமான பாசிட்டிவ் கருத்துக்கள் பெற்று வந்த இவர் கடைசியில் நெகட்டிவ் கருத்துக்கள் அதிகமாக பெற்ற ஒரு நபராக மாறிவிட்டார்.
இன்பம் துன்பம் எல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்று சொல்வது போல பாசிட்டிவ் நெகட்டிவ் எல்லாத்தையும் ஒரே போல எடுத்துக் கொண்ட ஜூலி தன்னுடைய வேலையிலேயே கவனமாக இருந்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடிக்கடி போட்டோ சூட் எடுத்து சமூக வலைத்தளத்தை பாடாய்ப் படுத்தி வந்தார். இவருடைய புகைப்படங்களுக்கு நெகட்டிவ் கருத்துக்கள் அதிகமாக குவிந்து கொண்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்த வேலையை பார்த்துக் கொண்டே இருந்தார்.

அந்த நேரத்தில் தான் ஜூலி அவர் காதலித்த ஒரு நபர் தன்னிடம் பணம் பொருள்கள் வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி அதுவரைக்கும் தனக்கு இருந்த நெகட்டிவ் கருத்துக்களை எல்லாம் துடைத்து எரிந்து விட்டு வெளியே பிரஷ்ஷாக வந்துவிட்டார்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அவர் பார்த்து வந்த செவிலியர் வேலையையும் இப்போது டாடா காட்டிவிட்டு ஒரு நடிகையாக மாறி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கண்மணி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கதாநாயகன் வெற்றி மீது கண்மணி ஒருதலை காதலில் இருக்க, வெற்றி மற்றும் அபியை பிரிக்கும் அனைத்து சூழ்ச்சிகளையும் செய்து கொண்டிருக்கும் டெரர் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதே நேரத்தில் வெற்றியை திருமணம் செய்து கொள்ள பல பிளான்களை போட்டு இருந்த கண்மணி தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது என்று வெற்றி மற்றும் கண்மணி இருவரும் மண்டபத்தில் இருக்கும் புகைப்படங்களை தற்போது ஜூலி தன்னுடைய சமூக வலைதளத்தில் தட்டி விட இது வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு இதே போலவே மாலையும் கழுத்துமாக வெற்றியின் அண்ணனோடு ஜூலி இருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications