நெட்டிசன்களிடம் தப்பித்த ஜூலி..!! ஜீன்ஸ்க்கு சேலையில் பெர்பார்ம்..ரசிகர்கள் கூறும் அறிவுரை
சென்னை:மஞ்சக் காட்டு மைனாவாக மாறி ஜூலி போட்டுள்ள ஜாலி வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் சப்தமே இல்லாமல் லைக்குகளை குவித்து வருகிறது.
அனேகமாக நெகட்டிவ் கமெண்ட்களை பெறாத ஜூலியின் வீடியோ இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லலாம்.ஜூலி வெறியர்கள் எல்லாம் கவிஞர்களாக மாறி ஜூலியின் வீடியோவிற்கு கவிதை மழை பொழிந்து வருகின்றனர்.

வீர தமிழச்சி டு பிக் பாஸ் ஜூலி
தமிழக இளைஞர்களின் வலிமையை உலகிற்கு காட்டிய ஜல்லிக்கட்டு போராட்டம் பல சமூகப் போராளிகளை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டினாலும் பெண் போராளியாக அந்த நேரத்தில் மிகவும் புகழின் உச்சியை தொட்டவர் ஜூலி. மெரினா பீச்சில் அவர் விட்ட சவுண்டு அரசாங்கத்திற்கு கேட்டுச்சோ.! இல்லையோ..!? விஜய் டிவிக்கு நல்லாவே கேட்டு இருக்கு. போராட்டத்த முடிச்சிட்டு வீட்ல இருந்த ஜூலிய வாம்மா..உன்ன அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போறாம்னு.. முதன்முறையாக ஆரம்பிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பலிகடாவாக ஜூலியை அள்ளிக்கொண்டு போனது விஜய் டிவி.

ஜூலி பிக் பாஸ் ஆல் காலியான கதை
ஒட்டுமொத்தமாக சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட பிக் பாஸ் முதல் சீசனில் பொது மக்களின் முகமாக இந்த போட்டியாளர் இருப்பார் என்று சொல்லி ஜூலியை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர். ஜூலியை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பிஐ வேற லெவலுக்கு ஏற்றிக்கொண்ட விஜய் டிவி ஜூலியின் டிஆர்பிஐ பொதுமக்களிடம் படும் மட்டமாக இறங்க செய்துவிட்டது. பிக் பாஸ் வீட்டிற்குள் போன ஜூலி அவருடைய அருமை பெருமை எல்லாம் காலி ஆகித்தான் வெளியே வந்தார். ஏழாவது வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததாலோ..!என்னவோ..!? வெளியே வந்து அவர் எடுத்து வைத்த எல்லாமே ஏழரைல தான்..!!

பாவமே பாவப்பட வைத்த ஜூலி
எந்த மெரினா பீச்சில் புகழ் உச்சியை அடைந்தாரோ..! அதே மெரினா பீச்சுக்கு மாறு வேஷத்தில் செல்ல வேண்டிய அளவிற்கு தன் பெயரை டேமேஜ் ஆக்கிக் கொண்டார். நர்ஸ் தொழிலை விட்டு மாடலிங்கில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு டிவி ஷோக்களில் விஜேவாக களம் இறங்கினார். அங்கும் அவருக்கு ரிப்பீட் மோடு தான். போன வேகத்திலேயே திரும்பி வந்து விட்டார். சமீபத்தில் ஒரு இளைஞர் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார் என்று பரபரப்பை கிளப்பினார்.

ஜூலிக்கு விடுதலை கொடுத்த நெட்டிசன்கள்
கொஞ்ச நாட்களாக பெரிய அளவிற்கு சமூக வலைதளங்களில் பெயர்அடிபடாத ஜூலி, தற்பொழுது இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்துள்ள வீடியோக்கள் மூலம் பேசும் பொருளாகியுள்ளார்.ஜூலி எதை போஸ்ட் செய்தாலும் அதை சம்பவம் செய்வதற்கென்று ஒரு குரூப் காத்துக் கொண்டிருக்கும். ஆனால் தற்போது ஜூலி போஸ்ட் செய்திருக்கும் வீடியோக்களையும் அதற்கு வரும் கமெண்டுகளையும் பார்க்கும் போது அந்த குரூப் ஜூலிக்கு விடுதலை கொடுத்து விட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுவதாக ஜூலி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் தற்பொழுது ஜூலி போட்டுள்ள வீடியோவிற்கு அவ்வளவு பாசிட்டிவ் கமெண்ட்கள் குவிந்து வருவதும் நெகட்டிவ் கமெண்ட்கள் இல்லாமல் இருப்பதுமே காரணமாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications