அட.. அது என் தம்பிங்க.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. கூல் செய்த ஜூலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டை போடாத தம்பியை கட்டியணைத்தபடி போஸ்ட் போட்ட ஜூலியின் போட்டோஸ்களை பார்த்ததும் அதிர்ச்சியான ரசிகர்கள் இப்படியெல்லாம் கூடவா சமூக வலைத்தளங்களில் பண்ணுவீங்க என கேள்வி கேட்டு வந்தனர் .

Recommended Video

    Julie ஆணுடன் எடுத்த புகைப்படம், தவறாக பேசிய Netizens #BBJODIGAL

    இதற்கு அதிரடியாக பதிலளித்த ஜூலியின் கமெண்ட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

    அது வேறு யாருமில்லை என்னுடைய ஒரே ஒரு தம்பி தான் என்று விளக்கியுள்ளார் ஜூலி.. அதன் பிறகுதான் ரசிகர்கள் ஆஃப் ஆகியுள்ளனர்.

    முதல் பிக் பாஸ்

    முதல் பிக் பாஸ்

    விஜய் டிவி ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி அது எத்தனை சீசன்கள் கடந்து இருந்தாலும் யாராலும் மறக்க முடியாது .அதுவும் முதல் சீசனை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது .அந்த சீசனில் மட்டும்தான் அதில் கலந்துகொண்டவர்கள் உண்மையாகவே இருந்தார்கள் .அதற்கு பிறகு வந்தவர்கள் முதல் சீசனை பார்த்து நன்றாக நடிக்க கற்றுக் கொண்டு தான் இந்த வீட்டிற்குள்ளே காலடி எடுத்து வைத்தனர்.

    ஜூலியின் பிரபலம்

    ஜூலியின் பிரபலம்

    அந்த அளவுக்கு ரசிகர்கள் கூறிவரும் நிலையில் ஜூலி என சொன்னதும் ரசிகர்களுக்கு பல நினைவுகள் மனதுக்குள் வந்து ஓடும். அந்த அளவுக்கு ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டார். ந்த நிகழ்ச்சிக்கு இவர் காலடி எடுத்து வைப்பதற்கு முழுமுதல் காரணம் இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாப்புலர் ஆனது தான். ஆனால் அதைவிடவும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டார்.

    துரு துரு பெண்

    துரு துரு பெண்

    இந்த சீசன் ஆரம்பித்ததிலிருந்து இவர் ரொம்பவும் துருதுருன்னு அனைவரின் மனதினை கவர்ந்த வெகுளி பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்தாலும் இவருக்கும் ஓவியா விற்கும் நடந்த ஒரு சில பிரச்சினைகளினால் இவரைப் பார்த்து பலரும் முகத்தை சுளிக்க ஆரம்பித்துவிட்டனர் .அது நடந்து முடிந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகி விட்டது.

    விமர்சனம்

    விமர்சனம்

    ஆனாலும் இப்போ வரைக்கும் நெட்டிசன்கள் இவரை அந்த நிகழ்ச்சியில் நடந்ததை வைத்து திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால் நெட்டிசன்களின் கலாய்ப்பை கண்டுகொள்ளாத இவர் சில நேரங்களில் அவர்களைப் பற்றிக் காண்டாகி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் .தற்போது இவர் பிக் பாஸ் டான்ஸ் நிகழ்ச்சியிலும் கூட இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வரும் நெட்டிசன்களை பற்றி தன்னால் முடிந்த அளவிற்கு திட்டி தீர்த்து இருந்தார் .

    வாயில் விழுந்த அவல்

    வாயில் விழுந்த அவல்

    ஆனால் மீண்டும் நெட்டிசன்களின் வாய்க்கு அவல் கொடுக்கும் வகையில் இவர் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். போஸ்டை பார்த்ததும் பார்ப்பவர்கள் அனைவருமே ஷாக் ஆகி விடுவார்கள். அந்த அளவிற்கு தான் இவர் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார் .என்னதான் பாப்புலரான ஆளாக இருந்தாலும் சரி இந்த மாதிரி எல்லாமா சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போடுவார்கள் என சிலர் முகத்தை சுளித்து வருகின்றனர்.

    அன்னையர் தின ஸ்ட்டேடஸ்

    அன்னையர் தின ஸ்ட்டேடஸ்

    மே மாதம் வந்தாலே அனைவரும் ஸ்டேட்டஸ் போடுவதற்காக அம்மாக்களை நச்சரித்து அதுவரைக்கும் இல்லாத பாசத்தை அன்னையர் தினத்தில் காட்டி விடுவார்கள் . ஆனால் அவர்களுக்கு எல்லாம் வித்தியாசமாக தற்போது ஜூலி தனது தம்பியை கட்டியணைத்தபடி என்னுடைய இன்னொரு அம்மா எனக்கு என வித்தியாசமாக போஸ்ட் போட்டு இருக்கிறார்.

    தம்பியுடன் போஸ்

    தம்பியுடன் போஸ்

    இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் இந்த போட்டோவை பார்த்து ஷாக்கான அவருடைய ரசிகர்கள் ஷாக் ஆகி என்ன எப்படி எல்லாம் போஸ்ட் போட்டு இருக்கீங்க பார்க்குறவங்க தப்பாக பார்ப்பார்கள் என இவருக்கு அறிவுரை கூறி வந்தனர் .ஆனால் தப்பு என்பது பார்ப்பவர்களின் கண்களில் தான் இருக்கிறது என ஜூலி பதிலளித்திருக்கிறார். இந்த போஸ்டும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+