Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாயாவுக்கும் உங்களுக்கும் ஏதாவது? கமல்ஹாசனை மேடையில் பங்கமாக கலாய்த்த புகழ், குரோஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் கமல்ஹாசனை ரசிகர்கள் அதிகமாக இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள். கமல் மாயாவிற்கு அதிகமாக சப்போர்ட் செய்து வருகிறார் என்று பலரும் கூறிவரும் நிலையில் அது பற்றி பேசி கமல்ஹாசனை மேடையில் புகழ் மற்றும் குரோஸி கிண்டல் செய்து இருக்கின்றனர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வருகிறது.

கமல்ஹாசன் இத்தனை வருடங்களாக முதல் சீசனில் இருந்து ஆறாவது சீசன் வரைக்கும் தொகுத்து வழங்கி வந்திருந்தாலும் இந்த அளவிற்கு அவருக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தது இல்லை.. ஆனால் இந்த சீசனில் தான் அதிகமாக அவர் இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறார். அது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் புகழ் இப்போ பிக் பாஸ்க்கு அப்புறம் இன்ஸ்டாகிராமில் ரொம்ப பிசியா இருக்கிறது கமல்ஹாசன் மட்டும் தான் என்று பேசி இருக்கிறார்.

bigg boss Kamal Haasan on the stage and is being teased by kuraishi and pugazh

இதுவரைக்கும் மக்கள்தான் கமல்ஹாசனை கலாய்த்து வந்தனர். ஆனால் இப்போது விஜய் டிவி பிரபலங்கள் கூட கமல்ஹாசனை இப்படி மேடையில் கலாய்க்கிறார்களே என்பது அவருடைய ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது. அப்படி என்னதான் நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் 6 சீசன்கள் முடிவடைந்து ஏழாவது சீசன் நாளையோடு முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் தான் ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிலம்பரசன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு தொகுப்பாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

bigg boss Kamal Haasan on the stage and is being teased by kuraishi and pugazh

இந்த நிலையில் இதுவரைக்கும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடு பார்ப்பதற்காக மக்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். ஆனால் இந்த சீசனில் அவர் மாயா குரூப்புக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார் என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. அதுவும் மாயா என்ன சொன்னாலும் சிரித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் தன்னுடைய கோபம் மற்றும் அதிருப்தியை பூர்ணிமா, அர்ச்சனா, விசித்திரா, தினேஷ் போன்றோரிடம் காட்டுகிறார் என்றும் பலர் இணையத்தில் அவரை மீம்ஸ்கள் வெளியிட்டு கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் சில youtube சேனல்களில் கூட கமல்ஹாசனை ட்ரோல் செய்து வருவதை பார்க்க முடியும். அதிலும் பரிதாபங்கள் கோபி யூடியூப் சேனலில் கமல்ஹாசன் போலவே உடை அணிந்து அவர்கள் செய்யும் அலப்பறை இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதை தொடர்ந்து இப்போது விஜய் டிவி புகழ் மற்றும் குரோஸி இருவரும் கமல்ஹாசனை கலாய்த்து மேடை ஒன்றில் பேசியிருக்கின்றனர்.

bigg boss Kamal Haasan on the stage and is being teased by kuraishi and pugazh

அதாவது ஒரு நிகழ்ச்சியில் புகழும் குரோஸியும் பேசிக் கொண்டிருக்கும் போது புகழ் கேட்கிறார் குரோஸி இடம் இப்போ இன்ஸ்டாகிராமில் ரொம்ப பேசப்படும் ஒரு நபராகவும் பிசியான நபராகவும் இருக்கிறது கமல்ஹாசன் தான் அவர்தான் பிக் பாஸ்க்கு பிறகு இப்போ ரொம்ப பிரபலம் ஆகி இருக்கிறார். அவரை போல பேசலாம் என்று சொல்லிக்கொண்டு குரோஸியிடம் புகழ்,, ஐயா உங்களுக்கோ மாயாவுக்கும்... என்று கேட்க அதற்கு குரோஸி கமல்ஹாசன் குரலில் ஒண்ணும் கிடையாது என்று சொல்கிறார்..

அதை தொடர்ந்து புகழ் அப்போ உங்களுக்கு சென்னையில் பிடித்த இடம் என்று கேட்க அதற்கு குரோஸி மீண்டும் கமல்ஹாசன் குரலில் பேசுகிறார். அப்போது மாயா ஜாலம் என்று சொல்கிறார். அதற்கு புகழ் உங்களுக்கு பிடித்த படம் என்று கேட்க அதற்கு குரோஸி மாயாபஜார் என்று சொல்கிறார்.. அதனால் கோபமான புகழ் எங்களுக்கு வாயில நல்லா வரும் என்று சொல்ல, மக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

bigg boss Kamal Haasan on the stage and is being teased by kuraishi and pugazh

அதை தொடர்ந்து கமல்ஹாசன் குரலிலேயே குரோஸி நான் மீண்டும் உங்களிடம் ஒன்று சொல்கிறேன். நான் யாருக்கும் சப்போர்ட் எல்லாம் பண்ணல. நான் கடவுள் இல்லை என்று சொல்றவனும் கிடையாது.ஆனால் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்றவன், உங்கள் நான்... என்று கமல்ஹாசன் போலவே பேசி முடிக்க இதற்கு புகழ் ஐயா வீடியோ காரங்களே இந்த வீடியோவை எடிட் செய்து வெளியே அனுப்பும்போது புகழ் மற்றும் குரோஸியை டேக் பண்ணி போட்டுறாதீங்க என்று பேசி இருக்கின்றனர்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இதுவரைக்கும் கமல்ஹாசனை வெளியே இருந்து தான் நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போது விஜய் டிவி பிரபலங்கள் கூட மேடையில் இவ்வளவு தைரியமாக ஓப்பனா மாயாவை வைத்து கலாய்க்கிறார்களே என்று பலரும் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+