திருச்சிற்றம்பலம் பட பாணியில் நடிகர் கவின் காதல்.. அதே நேரத்தில் நடிகை லாஸ்லியாவின் ரியாக்ஷன்
சென்னை: நடிகர் கவின் திருமண செய்திகள் தான் சில நாட்களாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் திருமண தேதி குறித்த தகவல்களும் அவருடைய வருங்கால மனைவி பற்றிய தகவல்களும் வெளியாகி இருக்கிறது .
அதே நேரத்தில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்திற்கு அதிகமான ரசிகர்கள் சில கேள்விகளை தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கவின் அதிக அளவில் வெளியே தெரியும் அளவிற்கு பிரபலமானது சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாகத்தான். இந்த சீரியலில் வேட்டையன் கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் அமோகமாக வரவேற்பு கிடைத்தது. சரவணன் மீனாட்சி சீரியல் ஒவ்வொரு சீசனிலும் ஒரு கதாநாயகன் இருந்த நிலையில் வேட்டையனுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உண்டு.
அதுபோல இந்த சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு நட்புனா என்னனு தெரியுமா என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக கவின் அறிமுகம் ஆகி இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
அதிகமான நேரம் பாத்ரூம் பக்கத்திலேயே இவர் சுற்றிக்கொண்டு இருந்ததால் பலர் பாத்ரூம் கவின் என்று கலாய்த்தாலும் இவருடைய பெண் ரசிகைகள் பல மடங்கு உயர்ந்து விட்டனர். அதுபோல இந்த நிகழ்ச்சி தான் பெரிய அளவில் கவின் உடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் சக போட்டியளரான லாஸ்லியாகவை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் போது கவின் காதலித்து வந்தது போன்று தான் பேசிக் கொண்டிருந்தார். இவர்கள் இருவருடைய பேச்சுவார்த்தை, செல்ல சண்டைகள் கூட பெரிய அளவில் வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் நினைத்திருந்தனர்.
ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தற்போது கவின் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடித்த டாடா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் தற்போது சில நாட்களாக விரைவில் திருமணம் என்ற செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் அவருடைய நீண்ட நாள் காதலி ஆன மோனிகாவை கரம் பிடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த மோனிகா வேறு யாரும் இல்லையாம் கவினுடைய சின்ன வயது தோழி தானாம். கிட்டதட்ட 30 வருடங்களாக கவினோடு பயணத்தை தொடங்கி வரும் மோனிகா ஆரம்பத்தில் இருந்து கவின் மீது அதிகமான பாசமும் கேரிங்கும் எடுத்துக் கொண்டவராம்.

இருவரும் ஒன்றாகவே இத்தனை வருடங்களாக இருந்தாலும் இருவருக்குள் இருக்கும் காதலை தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்று கவின் கூறி இருக்கிறார். அதோடு மோனிஷா தான் கவின் உடைய காஸ்ட்யூம் டிசைனர் ஆகவும் பியூட்டிசன் ஆகவும் இருந்து வருகிறாராம். இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் வருவது போன்று தான் நடிகர் கவின் உடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. கவினுக்கு பர்சனல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வந்த போது கூட அதையெல்லாம் கவலைப்படாமல் மோனிகா கவினுக்கு பக்கபலமாக இருந்து வருகிறாராம்.
இந்த நிலையில் கவின் உடைய திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளும்படி நடைபெற இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை லாஸ்லியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதுபோல அதில் அவருடைய ஸ்டோரில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம் பெறும் "நெஞ்சமெல்லாம் காதல்" என்கிற பாடலை ஒலிக்க விட்டு இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் அவர் கவின் திருமணம் பற்றி தெரிந்துதான் இப்படி ரியாக் செய்துள்ளாரா? என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுக்கின்றனர்.
-
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications