பிக் பாஸ் முடிந்தும் முடிவடையாத விக்ரமன், அசீம் சண்டை.. முகத்துக்கு நேராகவே வன்மம்.. வெளியான வீடியோ
விக்ரமன் மற்றும் அசீம் மாறி மாறி குறை கூறி வருவதை பார்த்து கொண்டாட்டத்தில் கூட இப்படியா பண்ணுவாங்க என நெட்டிசன்கள் கலாய்ப்பு.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன்6 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற்று இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கிறது.
அதற்கான பிரமோ தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இன்று இந்த நிகழ்ச்சிக்கான ஆறாவது பிரமோ வெளியாகி இருக்கிறது.

கடைசி நேர மாற்றம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு மாதம் ஆக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் கொண்டாட்டம் நடைபெற்று இருக்கிறது. இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசன் டைட்டில் வின்னராக விக்ரமன் தான் ஜெயிப்பார் என்று அனைவரும் கருத்து கூறி வந்த நிலையில் கடைசி நேரத்தில் அசின் ஜெயித்து விட்டார் என்று அறிவித்ததால் இருதரப்பு ரசிகர்களையும் அதிகமாக சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட வைத்திருக்கிறது.

விக்ரமன் அசீம் பிரச்சனை
அதுபோல என்னதான் அசீம் டைட்டில் ஜெயித்திருந்தாலும், பிக் பாஸ் முடிந்ததிலிருந்தே விக்ரமன் தோற்றது குறித்து சமூக வலைத்தளத்தில் பேசி வருகிறார். தன்னுடைய முதல் வீடியோவில் விக்ரமன் என்னுடைய நண்பர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நாங்கள் விளையாட்டாக மட்டும்தான் கருத்து மோதல்களில் ஈடுபட்டோம். மத்தபடி எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் விக்ரமன் அசீம் ஜெயித்தது தவறான முன்னுதாரணமாக மாறிவிட கூடாது என்று தன்னுடைய கருத்தை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அதிகமாக விக்ரமனை பற்றி சமூக வலைத்தளத்தில் அசீம் பேசி வருகிறார்.

தொடரும் கருத்து மோதல்கள்
அசீம் ஜெயித்ததை குறித்து ஷிவின், மகேஸ்வரி, ரச்சிதா போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போதே அவர்களுக்கு அசீம் மீது பெரிய அளவில் அபிப்பிராயம் இல்லாத காரணத்தினால் வெளியே வந்த பிறகும் பேட்டிகளில் தங்களுடைய கருத்தை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் பேட்டிகளில் தங்களை மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும் அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் சண்டையிட்டு கொண்டுள்ளனர்.

இப்படியா பண்ணுவாங்க
இன்று வெளியான பிரமோவில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு துண்டு சீட்டில் கேள்விகள் கேட்கப்படுகிறது. அப்படி கேட்கப்படும் போது மணிகண்டன், இந்த வீட்டிற்கு யாரோடு டேட்டிங் செய்ய விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு குயின் சி என்று சொல்ல, தனலட்சுமி இந்த வீட்டில் நீங்கள் யாராக மாறுவீர்கள் என்ற கேள்விக்கு நான் அசீமாக மாறுவேன் என்று கூற, அதைத் தொடர்ந்து விக்ரமனிடம் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் gossip guy யார் என்ற கேள்வி வந்தது.அதற்கு விக்ரமன் அசீமின் பெயரை சொல்ல, உடனே இப்படி பேசுபவர்களே ஆயிரம் gossip பேசி இருக்கிறார்கள்.அவர்கள் சொல்லும்போது தான் எனக்கு சிரிப்பாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த பிரமோவை தற்போது நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து பிக் பாஸ் முடிந்தும் இப்படி வன்மத்தை கக்கிக்கொண்டு இருப்பீர்களா? என்று கேள்வி எழுப்பி கலாய்த்து வருகிறார்கள்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications