விக்ரமனுக்கு மகுடம் சூட்டிய துப்புரவு தொழிலாளர்கள்.. அசீம் மற்றும் தனா செயலை கலாய்க்கும் ரசிகர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கொண்டாட்டத்தில் விக்ரமனை துப்புரவு தொழிலாளர்கள் பாராட்டி மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கொண்டாட்டத்திற்கான மூன்றாவது ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது.
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவல நிலையை குறித்து விக்கிரமன் நாடகம் நடித்து பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார்.
அதனை பாராட்டி துப்புரவு தொழிலாளர்கள் விக்ரமனுக்கு மகுடம் சூட்டி மரியாதையை செய்து இருக்கின்றனர்.

பிக் பாஸ் கொண்டாட்டம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இந்த சீசனில் பிக் பாஸ் கொண்டாட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தற்போது ஏற்கனவே இரண்டு ப்ரோமோக்கள் வெளியான நிலையில் இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விக்ரமன் தன்னுடைய கருத்தை பிக் பாஸ் மேடையில் மீண்டும் உரக்க பேசுகிறார். அதை ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.

சமூக அவலம்
பொது மேடையில் எதற்காக அரசியலை பேசுகிறார்கள் என்று பலர் கேட்கிறார்கள் ஆனால் மக்கள் மேடையில் மக்கள் பிரச்சினையை பற்றி பேசாமல் வேறு எங்கு பேசுவது? என்று தன்னுடைய கேள்வியை விக்ரமன் எடுத்து வைக்க, பின்பு அங்கு துப்புரவு பணியாளர்கள் வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் விக்ரமன் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வரும் விதமாக நடித்துக் காட்டி கடைசியில் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் மாற வேண்டும் என்று குரல் கொடுத்து இரந்தார். அது சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களுடைய பாராட்டையும், ஆதரவையும் பெற்று வந்தது.

துப்புரவு பணியாளர்களின் பாராட்டு
மட்டுமல்லாமல் கமல் அந்த வாரம் இறுதியில் இதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் விக்ரமனின் நியாயமான கோரிக்கை குறித்து பாராட்டவும் செய்து இருந்தார். இந்த நிலையில் தற்போதைய பட்ஜெட்டில் கூட மனித கழிவுகளை மனிதனை அல்லும் முறை மாற்றப்பட்டு அதற்கு 100% மெஷின்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் இந்த பிக் பாஸ் கொண்டாட்ட மேடையிலும் விக்ரமனின் நடிப்பு தங்களுடைய வாழ்க்கையை பிரதிபலித்து விட்டது. பலருக்கும் எங்களுடைய குரல் மற்றும் துயரம் தெரிய தொடங்கிவிட்டது என்று விக்ரமனை பாராட்டி துப்புரவு தொழிலாளர்கள் மாலை அணிவித்து தலையில் கிரீடம் வைத்து பாராட்டினர்.

நெட்டிசன்களின் கேள்விகள்
இந்த பிரமோவில் விக்ரமனுக்கு துப்புரவு தொழிலாளர்கள் மரியாதை செய்யும் போது அங்கிருந்த போட்டியாளர்கள் பலர் கைத்தட்டி தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவிக்கும் போது தனலட்சுமி மற்றும் அசீம் இருவரும் இப்படியே உட்கார்ந்து இருக்கின்றனர். அருகில் இருந்த ஷாவின், ரச்சிதா சத்தம் போட்டு கொண்டாடி அசீம் மற்றும் தனலட்சுமி வெறுப்பேற்றும் விதமாக செய்து கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தனலட்சுமிக்கும், அசீமிருக்கும் இந்த அளவிற்கு வயிற்று எரிச்சலா? அதனால்தான் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்களா? என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications