பள்ளியில் க்யூட்டாக கலக்கிய மைனாவின் மகன்.. விசில் சத்தத்தால் அதிர்ந்த அரங்கம்.. நெகிழ்ச்சியில் மைனா
சென்னை: சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக சின்னத்திரையில் பிரபலமானார் மைனா நந்தினி.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் மைனா நந்தினி தன்னுடைய மகன் பள்ளி ஆண்டு விழாவில் நடந்த சுவாரசியங்களை பகிர்ந்து இருக்கிறார்.

பள்ளியில் மகன்
சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளிலும் மைனா நந்தினி கலக்கி வரும் நிலையில் தன்னுடைய மகனின் பள்ளி ஆண்டு விழாவிற்கு கோழி போல வேடம் அணிந்து அழைத்து சென்றிருக்கிறார். அந்த பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகவும் மைனாவும், அவருடைய கணவர் யோகேஷும் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த விழாவில் மைனா நந்தினியின் மகன் துரு க்யூட்டாக நடனமாடி இருக்கிறார். அதிகமான விசில் சத்தமும் கைத்தட்டல்களும் குவிந்து இருக்கிறது. மைனா நந்தினி மேலும் பள்ளியில் குழந்தைகள் படிக்கவில்லை என்றால் ஓவராக அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காதீங்க. அவங்களுக்கு இருக்கும் வேறு திறமையை தூண்டுங்க என்று பெற்றோருக்கு அறிவுரையும் கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை மைனா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

முதல் சீரியல்
மைனா நந்தினி மதுரையை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும். இவர் முதன்முதலாக சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானார். அதற்கு பிறகு இவருக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முதல் சீரியலே சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த சீரியலில் மீனாட்சி தோழியாக மைனா கேரக்டரில் இவர் நடித்திருப்பார். முதல் சீரியலில் இவருக்கு கிடைத்த பிரபலமும் காரணமாகவே இவருடைய பெயர் நந்தினி மறைந்து மைனாவாக மாறிவிட்டது.

திரைப்படங்களில் நடிப்பு
சரவணன் மீனாட்சிக்கு பிறகு சின்ன தம்பி, நீலி, அரண்மனைக்கிளி போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அது மட்டுமில்லாமல் சில வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் இவருக்கு திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெண்ணிலா கபடி குழு, காஞ்சனா, நம்ம வீட்டு பிள்ளை, விக்ரம் போன்ற பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார். சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் பிரபலம்
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி நான்கு இடங்களில் ஒருவராக இவரும் தேர்வானார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக மைனா நந்தினி மட்டுமல்லாமல் அவருடைய மகனும் பிரபலமாகி விட்டார். இவருடைய மகன் துருவ் பற்றி சமூக வலைதளத்தில் அதிகமான வீடியோக்களை மைனா ஏற்கனவே பகிர்ந்து வந்திருக்கிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் துருவ் அறிமுகமான பொழுது மற்றும் அங்கே அவர் சுற்றி திரிந்து விளையாடிய விளையாட்டுக்கள் அனைத்துமே அதிக அளவில் வைரலாகி ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளையும் பெற்று வந்தது.

அதிர்ந்த கைத்தட்டல்கள்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தோடு அதிகமாக நேரத்தை செலவழித்து வரும் மைனா நந்தினி தற்போது தன்னுடைய மகனின் பள்ளி ஆண்டு விழாவில் நடந்த சுவாரசியங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் ஒரு கோழி போல உடை அணிந்த மைனா நந்தினியின் மகன் துருவ் பல பேரோடு அந்த மேடையில் ஆடிக் கொண்டிருந்தாலும், இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் மற்றும் சேட்டைகள் அனைவரையும் கவர்ந்திருந்தது. அனைத்து குழந்தைகளும் அங்கே பயந்தபடி இருக்கும்போது கூட துருவ் ஜாலியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications