பாலியல் குற்றச்சாட்டு.. கவனம் ஈர்க்கும் பிக் பாஸ் முத்துக்குமரனின் இன்ஸ்ட்டா பதிவு
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வான முத்துக்குமரன் மீது வாஹதி என்ற பெண் சொன்ன பாலியல் குற்றச்சாட்டு சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில், முத்துக்குமரன் கடைசியாக இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவும் கவனம் பெற்று இருக்கிறது. அதிகமான ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்களை குவிக்கின்றனர். அந்த வீடியோ வேற எதுவும் இல்லை ஏழுகடல் ஏழுமலை படத்தை பார்த்துவிட்டு முத்துக்குமரன் கொடுத்த ரிவ்யூ தான். இந்த வீடியோவை வைத்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.
பிக் பாஸ் முத்துக்குமாரனை சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்திருக்கும். அடிக்கடி மோட்டிவேஷனாக பேசுவது, நாட்டு நடப்பு பற்றி விவாதிப்பது, தனக்கு பிடித்த சாப்பாடு பற்றி ரிவ்யூ செய்வது, திரைப்படங்களை ரிவ்யூ செய்வது என்று அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டே இருப்பார்.

பிக் பாஸ் பிரபலம்
அதுபோல பல நிகழ்ச்சிகளில் கூட எனக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கிடையாது, என்னுடைய போதையே சாப்பாடு தான். அதனால் நான் சாப்பாடை ரசித்து ருசித்து சாப்பிடுவேன் என்றும் சொல்லி இருக்கிறார். அதுபடி தான் சாப்பிடும் சாப்பாட்டை கூட வீடியோ எடுத்து வெளியிட்டு அடுத்தவர்களையும் சாப்பிட தூண்ட வைத்து விடுவார். ஆனால் இப்போது அவர் சந்தித்திருக்கும் சர்ச்சை தான் பெரிய அளவில் பேசப்படுகிறது.
காரணம் சோசியல் மீடியா பிரபலமான வாஹதி என்ற பெண், முத்துக்குமரன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவில், எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. அந்த விஷயம் முத்துக்குமரனுக்கு தெரியும். நான் காதல் பிரேக்கப்பில் இருந்தேன், அந்த சமயத்தில் முத்துக்குமரன் எனக்கு ஆறுதலாக பேசியிருந்தார். ஒருநாள் அவருடைய வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போய் 10000 முத்தங்கள் தந்தார்.
பாலியல் குற்றச்சாட்டு
நாங்கள் 2 பேரும் உறவிலிருந்தோம். நான் உனக்கு தாலி கட்டுகிறேன் என்று சொல்லி இருந்தாரு. ஆனால் இப்போ நிலைமை அப்படி இல்ல.. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று மது குடித்தபடியும், சிகரெட்டு புகைத்தபடியும் ஒரு வீடியோவில் பேசியிருந்தார். பிறகு இன்னொரு வீடியோவில் என்னுடைய மரணத்துக்கு காரணம் முத்துக்குமரன் தான் என்று சொல்லி இருந்தார். ஆனால் அதே வீடியோவின் கடைசியில் என்னுடைய இறப்புக்கு காரணம் நான் தான் எனக்கு இருக்கும் மன அழுத்தம் என்றும் சொல்லி இருந்தார்.
பிக் பாஸ் முத்துக்குமரன் பதிவு
இந்த குழப்பமான வீடியோக்கள் நேற்று இரவு முதல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து முத்துக்குமரன் அந்த பெண் என்னுடைய தோழிதான் ஆனால் அவர் எதற்காக இப்போ இப்படி பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அதற்காக விளக்கம் கேட்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் முத்துக்குமரன் கடைசியாக 5 நாட்களுக்கு முன்பு ஏழுகடல் ஏழுமலை படத்தை பார்த்து ரிவ்யூ கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த ரிவீவை யாரும் கேட்டார்களா இல்லையோ அந்த பதிவுக்கு கீழே முத்துக்குமரன் உங்களுடைய வீடியோ ஒன்று வைரல் ஆகிறதே அதை பற்றி சொல்லுங்க என்று கேள்வி கேட்கிறார்கள்.
முத்துக்குமரனின் வீடியோ
அதற்கு காரணம் வாஹிதா வெளியிட்ட ஒரு வீடியோவில் முத்துக்குமரனும் அந்த பெண்ணும் நெருக்கமாக இருக்கும் சில கிளிப்ஸ்கள் இருக்கிறது. அதில் இதுதான் அழகான பொண்ணு என்று அந்த பெண்ணை முத்துக்குமார் கொஞ்சுவது போல இருக்கிறது. இது ரியலான வீடியோவா? அல்லது ஏஐ வீடியோவா? என்ற குழப்பமும் இருக்கிறது. இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தினால் தான் உண்மையான தகவல்கள் வெளியே தெரியவரும். இதற்கிடையில் முத்துக்குமரனை பலரும் ட்ரோல் செய்து, கலாய்த்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
