நிக்சன் பிக் பாஸுக்குள்ள பண்ணுன அந்த விஷயம் பிடிக்கல! நம்பர் பிளாக் பண்ணுன ரகசியம்! அவர் அப்பா ஓப்பன் அப்
சென்னை: விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நிக்சன் குறித்து அவருடைய தந்தை பேட்டி ஒன்றில் மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் நிக்சன் இருக்கும் போது ப்ரீஸ் டாஸ்க்கில் கலந்து கொண்ட நிக்சனின் அப்பா நிக்சன் நம்பரை பிளாக் செய்திருந்தேன் என்று சொல்லி இருந்தார். அது குறித்து சமீபத்தில் பேட்டியில் எதனால் நிக்சன் நம்பரை பிளாக் செய்தேன் என்ற ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் போட்டியாளராக இல்லாமலும் நிக்சனின் அப்பா சிறப்பு விருந்தினராக உள்ளே சென்று ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். நமக்கு இப்படி ஒரு அப்பா கிடைக்கவில்லையே என்று பலர் ஏங்கிப் போயிருந்தனர். ஒரு சிலர் ரசிகர்கள் இதுபோல தான் எங்க அப்பாவும் என்று தங்களுடைய அப்பா மீது பாசத்தை பொங்கியதையும் பார்க்க முடிந்தது.

என்னதான் இருந்தாலும் நிக்சன் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தாலும் பிறகு ஐசுவோடு நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்தது. அதுபோல அர்ச்சனாவிடம் சண்டை போட்டது, வினிஷாவை உருவ கேலி செய்தது போன்ற விஷயங்களுக்கு பலர் அவரை திட்டி வந்தனர். அந்த நேரத்தில் தான் நிக்சனின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து லெப்ட் ரைட் வாங்கி இருந்தார்.
அதுவும் பிக் பாஸ் வீட்டிற்குள் நிக்சனின் அப்பா போகும்போது நிக்சன் முகம் அப்படியே அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டதுக்கு காரணம் தன்னுடைய நண்பர்கள்தான் வருவார்கள் என்று நினைத்து இருந்த நிக்சனுக்கு அப்பாவின் வருகை பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. பிறகு என்னால் தான் என்னுடைய மகனை திருத்த முடியவில்லை ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அவனை நல்லபடியாக திருத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சிரித்துக் கொண்டே பேசியது ஒரு தந்தையின் வலியாக தெரிந்தது.
இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு நிக்சனின் அப்பா பேட்டியில் நிக்சன் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் பிக் பாஸ் வீட்டுக்குள்ள நிக்சன் போகும்போது என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல, அடிக்கடி ஆடிசன் போனால் நானும் எங்கேயோ போய்ட்டு வரேன்னு நினைச்சிருந்தேன். நண்பர்களிடம் சொல்லிட்டு போயிருக்கான். என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
அவன் ஒருவேளை அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று நினைத்தானோ என்னவோ...? அது போல பிக்பாஸ் வீட்டுக்குள்ள நிக்சன் பண்ணுனதில் எனக்கு பிடிக்காத விஷயம் என்றால் அது ஒரு டாஸ்க்கில் ஓடிப்போய் கண்ணாடியை உடைத்து இருப்பான். அது எவ்வளவு பெரிய தப்பு? ஒருவேளை அந்த கண்ணாடி உடைஞ்சதில் இவனுக்கு ஏதாவது ஆகி இருந்தால் எவ்வளவு கஷ்டமா இருக்கும்? அதே நேரத்தில் அந்த கண்ணாடிக்கு பின்னாடி இருந்தவர்களுக்கும் நல்லவேளையாக எதுவும் ஆகவில்லை.
அதே நேரத்தில் அங்கிருந்தவர்கள் யாராவது ஒருவருக்கு அந்த கண்ணாடியால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும்? இப்படி அஜாக்கிரதையாக இருக்கலாமா? என்பது எனக்கு கோபத்தை கொடுத்தது. அதுபோல நிக்சன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது செய்த செயல்களில் நான் ரொம்பவே ரசித்தது என்றால் அது அந்த தனுஷ் பாட்டுக்கு டான்ஸ் ஆடுனான்லா அது தான்...
அது எனக்கு ரொம்பவே பிடித்தது. நிக்சனுக்கு இப்படி எல்லாம் ஆட தெரியுமா என்று கூட நான் அந்த நேரத்தில் யோசித்து இருந்தேன். அதுபோல நான் பிக் பாஸுக்குள் நிக்சன் இருக்கும்போது அவனிடம் போன் நம்பரை பிளாக் பண்ணி இருந்தேன் நீ வெளியே வா அதை அன்ப்ளாக் பண்ணிவிடுவேன் என்று சொன்னேன்.
அதை வைத்து எல்லாரும் எதற்காக பிளாக் பண்ணீங்கன்னு கேட்டாங்க. அது வேற ஒன்னும் இல்ல சின்ன காரணம் தான். என்னன்னா நிக்சன் அடிக்கடி அவனோட நண்பர்களோட வெளியே சுத்த போயிடுவான். போயிட்டு நைட்டு அப்பா கதவை பூட்டிராத திறந்து வை நான் வருவேன் என்று எனக்கு போன் பண்ணுவான். எனக்கு அது டிஸ்டர்பன்ஸா இருந்தது... நிம்மதியா என்னால தூங்க முடியல. அதனால நான் அவனோட நம்பரை பிளாக் பண்ணி வச்சிருந்தேன். பிறகு அன்பிளாக் பண்ணிட்டேன் என்று அந்த பேட்டியில் நிக்சன் தந்தை பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications