விஜயகாந்த் மேலயும் ஏதாவது பழி போட போறா.. அஞ்சலி செலுத்திய பூர்ணிமாவை திட்டிய ரசிகர்.. காரணம் இதுவா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பூர்ணிமா நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். ஆனால் சமூக வலைத்தளத்தில் அவரை சில ரசிகர்கள் திட்டி கமெண்ட் வெளியிட்டு வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்ததும் பூர்ணிமா ரோட்டில் டான்ஸ் ஆடி இருந்தார். ஆனால் வீட்டிற்கு சென்ற பிறகு வேறு உடை மாற்றி விட்டு மறைந்த விஜயகாந்தின் நினைவு இடத்திற்கு வந்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் பூர்ணிமா வெளியே வந்ததும் விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் அனுதாபத்தை வைத்து விளம்பரம் தேடிக் கொள்கிறார் என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.
அதோடு ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் மீது வீணான பழி சொல்லியது போல விஜயகாந்தின் சமாதியில் இருக்கும் பூர்ணிமா அவர் மேலேயே ஏதாவது பழி சொல்லிட போறா என்று மரியாதை குறைவாகவும் திட்டி வருகிறார்கள்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி பல பேரை வாழ வைத்திருக்கிறது. சில பெயரை இருந்த புகழையும் இழக்க செய்து இருக்கிறது. அந்த மாதிரி தான் இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்களின் நடந்து இருக்கிறது. அதிலும் அராத்தி என்று யூடியூபில் தன்னை அழைத்துக் கொள்ளும் பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்த ஒரு சில நாட்கள் பாசிட்டிவாகவே இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் மாயாவோடு சேர்ந்து விளையாடிய விதம் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதுவும் சக போட்டியாளர்களுக்கு எதிராக மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் பிளான் போட்டது ரசிகர்களின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. அதோடு பிரதீப் உடைய வெளியேற்றத்திற்கு பூர்ணிமா முக்கிய காரணமாக இருந்தார். இதனாலேயே தொடர்ச்சியாக பிரதீப் உடைய ரசிகர்கள் பூர்ணிமாவை திட்டி தீர்த்து வருவதை இணையத்தில் பார்க்க முடிகிறது.

இப்படியான நிலையில் தான் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியே இருந்தார். வெளியே வந்ததும் அவருக்கு அவருடைய குடும்பத்தினர் பிரம்மாண்டமாக வரவேற்பு வைத்திருந்தனர். அது இப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் எல்லா போட்டியாளர்களுக்கும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
அதுபோல பூர்ணிமாவிற்கும் நேற்று வெடி வெடித்து, ஆள் உயர மாலை போட்டு வரவேற்று இருந்தனர். அப்போது பூர்ணிமாவும் புடவையில் நடு ரோட்டில் குத்தாட்டம் போட்டிருந்தார். அதைத்தொடர்ந்து வீட்டிற்கு போன பூர்ணிமா அடுத்ததாக மறைந்த விஜய்காந்தின் நினைவிடத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அங்கு சோகத்தின் உருவமாக பூர்ணிமா இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் கடுப்பான சில நெட்டிசன்கள் பூர்ணிமாவின் மீதுள்ள வன்மத்தை கமாண்டுகளில் கொட்டி வருகிறார்கள். அதுவும் பூர்ணிமா செய்வது "ஆக்சன் மேடம்" என்று அவரை கலாய்க்கின்றனர். அதோடு பூர்ணிமா விஜயகாந்த் நினைவிடத்தில் வந்து அவர் மீது ஏதாவது பழிபோட்டுற போற என்று சிலர் கமெண்ட் போட்டு இருக்கின்றனர்.
அதோடு பூர்ணிமாவிற்கு ஆண்களை தவறாக சித்தரிப்பது வழக்கம். அதனால் விஜயகாந்தின் சமாதியில் இருக்க அவருக்கு அருகதை இல்லை என்றும்... காசுக்காக என்ன வேணாலும் செய்யக்கூடிய மட்டமான பெண் என்றும் சில தங்களுடைய வன்மத்தை கட்டி இருக்கின்றனர். இதற்கு ஒரு சில ரசிகர்கள் பூர்ணிமாவிற்கு ஆதரவாக கமெண்ட் வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் வீட்டிற்குள் அங்கு இருக்கும் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி சிலருடைய விளையாட்டுப் போக்கு மாறி இருக்கும். ஆனால் அதையே நிஜம் என்று நம்பி பலர் இப்படி தங்க ஒருவருடைய கேரக்டரை அசிங்கப்படுத்துவது எவ்வளவு சரி என்று தெரியவில்லை.. இதுபோலத்தான் தெலுங்கு பிக் பாஸ் 7 இல் கூட நடந்தது.
அங்கு ஒரு யூட்டியூப்பர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு போட்டியாளராக ஆரம்பத்தில் இருந்தே இருந்த சீரியல் நடிகர் மீது வெற்றி பெற்ற போட்டியாளரின் ரசிகர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளே பிக் பாஸ் சீசன் 7 தெலுங்கு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அதே போல தான் தற்போது தமிழ் பிக் பாஸிலும் நடக்கிறது.












Click it and Unblock the Notifications