முதலிரவு அறை வீடியோவை போஸ்ட் போட்ட பிரதீப்.. அட பாவமே இப்படியுமா யோசிப்பாங்க?
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பிரதீப்பிற்கு நேற்று திருமணம் நடைபெற்றது. அவருடைய நீண்ட நாள் காதலியான பூஜாவை திருமணம் செய்து இருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஃபர்ஸ்ட் நைட் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார். இது இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்ட பெயர் பிரதீப் ஆண்டனி தான். அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியது ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனங்களை பெற்றது. சமூக வலைத்தளத்தில் பிரதீப்புக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வந்தனர். பிரதீப் அருவி, வாள் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதோடு முந்தைய பிக் பாஸ் போட்டியாளரும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருமாக இருக்கும் கவினுடைய நெருங்கிய நண்பர் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் இருக்கும்போது கெஸ்ட் ஆக நுழைந்த பிரதீப் அவருடைய கன்னத்தில் ஓங்கி அடித்தது பெரிய அளவில் பேசப்பட்டது.
யார் இவர் என்று அப்போதே இவர் குறித்து தேடப்பட்டது. அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரும் போட்டியாளராக வந்ததும் இவர்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னராக போகிறார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் இவர் மீது வைத்த குற்றச்சாட்டு காரணமாக இவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
வெளியே வந்த பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் கமல்ஹாசன் குறித்தும் அவ்வபோது போஸ்ட் போட்டு இருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிரதீப்க்கு அவருடைய காதலியான பூஜா சக்தி என்பவரோடு என்கேஜ்மென்ட் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இவர்களுடைய எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்த நிலையில் நேற்று (நவம்பர் 7ஆம் தேதி) இவர்களுடைய திருமணம் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது.
இந்து முறைப்படியும் கிறிஸ்தவ முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒரு சிலர் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி இந்த திருமணத்தில் முக்கிய நபராக இருந்தார். அவர் தான் திருமண புகைப்படங்கள் பலவற்றையும் வெளியிட்டு இருந்தார். திருமணத்திற்கு முந்தைய நாள் பிரதீப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அது தேவதையை கண்டேன் திரைப்படத்தில் ஸ்ரீதேவி ஒரு இடத்தில் நினைத்து பார்ப்பார்.. தனுஷை திருமணம் செய்தால் எப்படி எல்லாம் கஷ்டப்பட போகிறோம் என்று அவர் நினைத்து பார்ப்பது போல ஒரு காட்சி இருக்கும். அதில் மளிகை கடையில் தனுஷ் கடன் கேட்டு கெஞ்சுவது போல இருக்கும். அந்த காட்சிகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பிரதீப் இப்ப கூட யோசிச்சுக்கோங்க பூஜா இதுதான் உனக்கு கடைசி சான்ஸ் என்று எழுதியிருந்தார்.
இதை பார்த்ததும் இவருக்கு திருமணமா என்ற கேள்விகள் எழுந்து வந்தது அடுத்த நாளே இவர் திருமண புகைப்படங்கள் வெளியிட்டு கன்ஃபார்ம் செய்து விட்டார். அதைத் தொடர்ந்து திருமணம் முடிந்ததும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் இதுதான் இப்போது இணையத்தில் விமர்சிக்கப்படுகிறது.

அதாவது அதில் கட்டா குஸ்தி திரைப்படத்தில் விஷ்ணுவின் முதல் இரவு காட்சிகள் போன்று ஒரு புகைப்படத்தை வைத்து அதில் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சோபா பாய் பேசிய கிளிப்சை வைத்திருக்கிறார். அதில் "எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நைட் தூக்கமே வர மாட்டேங்குது. இதை நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.
ஒரு வாரமா நான் தூங்கவே இல்ல... அவ்ளோ சந்தோஷமா இருந்தேன். டெய்லி உங்களுக்காக நான் வீடியோ போடுறேன் என்று இருக்கிறது." இந்த மீம்ஸ் வீடியோவை இவர் பகிர்ந்திருக்கும் நிலையில் பிரதீப்புக்கு குசும்பு அதிகம் தான் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
Kerala lottery: கேரள சம்மர் பம்பர் 10 கோடி.. குருவாயூர், கோட்டயம், புனலூர், திருவனந்தபுரம்.. வரிசையாக பரிசு மழை தான்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு












Click it and Unblock the Notifications