விசித்ராவின் வெளியேற்றம்.. அவள் தகுதியற்றவள், சபிக்கப்பட்டவள் ரச்சிதாவின் திடீர் பதிவு.. காரணம் இதுவா?
சென்னை: நடிகை விசித்ரா பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் விசித்ராவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் கடந்த சீசனில் தான் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன்னை குறித்து ரசிகர்கள் வெளியிட்ட பதிவை இப்போது கேப்ஷனாக கொடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் கடந்த சீசனில் நடந்ததுதான் எப்போதும் ரிப்பீட் ஆகிறது.. இதுதான் வரலாறா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்த நிலையில் தினேஷ் மீது கோபத்தில் இருக்கும் ரச்சிதா தினேஷ் நேரடியாக எதிர்த்த விசித்திராவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் அவருடைய வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் இப்படி ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்த பதிவுதான் இப்போது இணையத்தில் வைரல் ஆக வருகிறது.
சின்னத்திரை தம்பதிகளான ரச்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் இருவரும் சில காலமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டிருந்தபோது தினேஷ் தன்னுடைய ஆதரவு முழுக்க ரச்சிதாவிற்கு கொடுத்து வந்தார். அதோடு ரச்சிதா அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் தினேஷை புரிந்து கொண்டு மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் மாறாக இவர்களுடைய பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போனது. இப்போது இருவரும் விவாகரத்து கோரி வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தினேஷ் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
இதில் கலந்து கொள்ளும் போது ஆரம்பத்தில் இருந்தே நான் இந்த சீசனின் டைட்டிலை ஜெயித்து என்னுடைய மனைவிக்கு பரிசளிப்பேன் என்று பல இடங்களில் தினேஷ் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் தினேஷுக்கும் விசித்ராவிற்கு அடிக்கடி கருத்து மோதல்களும் சண்டைகளும் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ரச்சிதா தன்னுடைய ஆதரவை வெளிப்படையாகவே விசித்திராவிற்கு கொடுத்து வந்தார். அதே நேரத்தில் தினேஷின் பெற்றோர் தங்களுடைய மகனின் வாழ்க்கை இப்படியாகிவிட்டது என்று பல இடங்களுக்கு கண்கலங்கி அழுது கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு விசித்திராவிற்கு பெரிய அளவில் ஆதரவை நேரடியாக தெரிவிக்காமல் இருந்த ரச்சிதா அடிக்கடி தினேஷை தாக்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு வருவதை பார்க்க முடிந்தது.
அதனால் ஆரம்பத்தில் ரச்சிதாவிற்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்த ரசிகர்கள் கூட நாட்கள் போகப்போக தினேஷ் பிடிக்கவில்லை என்றால் எதற்காக இப்படி வன்மத்தை சமூக வலைத்தளத்தில் கக்கிக்கொண்டே இருக்க வேண்டும். அவர் பல இடங்களில் தன்னுடைய காதலை வெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறார் ஆனால் ரச்சிதா இப்படி செய்கிறார் என்று கேள்வி எழுப்ப அதனால் கோபத்தில் ரச்சிதா அதற்கும் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார்.
இப்படியான சூழ்நிலையில் இன்று விசித்திரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சீசனில் தான் வெளியாகும் போது ரசிகர்கள் வெளியிட்ட போஸ்ட் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதில், "அதே நாள்... இதுதான் ஹிஸ்டரியில் ரிப்பீட்டா...?" என்று கேப்ஷனோடு பகிர்ந்திருக்கிறார்.
அந்த பதிவில் கூட "அவள் யாரையும் காயப்படுத்த வில்லை. ஆனால் நிறைய காயப்பட்டாள். அவள் யாரையும் கேலி செய்யவில்லை, ஆனால் நிறைய கேலி செய்யப்பட்டாள். அவள் யார் தகுதியையும் குறைத்து பேசவில்லை, ஆனால் அவள் தகுதியற்றவள் என்றே கூறப்பட்டாள். அவள் அன்பை மட்டுமே அனைவருக்கும் அளித்தாள் கண்ணீரை மட்டுமே சுமந்து செல்கிறாள்.... அவள் ஒரு சபிக்கப்பட்ட தேவதை" என்று அந்த பதிவில் இருந்தது. அதை இப்போது ரச்சிதா பகிர்ந்து இருக்கும் நிலையில் இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications