என்னை அந்த வார்த்தை சொல்லி ஏமாற்றி விட்டார்.. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்
சென்னை: பிரபல நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தனக்கு ஆரம்ப காலகட்டத்தில் சினிமா துறையில் கிடைத்த ஏமாற்றங்கள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் ராஜா ராணி திரைப்படத்தில் தன்னிடம் முக்கிய கேரக்டரில் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்.
சாக்ஷி அகர்வால் ஆரம்பத்தில் மாடலிங் மூலமாக சினிமாவில் நுழைந்து இப்போது முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். அதுவும் இணையத்தில் பயங்கரமாக ஆக்டிவாக இருக்கும் சாக்ஷிக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் சாக்ஷி பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

நடிகை சாக்ஷி அகர்வால் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக லட்சத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாலும் தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓராயிரம் கோணல் என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தார். வேலை பார்த்துக் கொண்டே இருக்கும் போது மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்த சாக்ஷி பல பெரிய விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.
அந்த நேரத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக சாக்ஷி கலந்து கொண்டார். அதற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. அதோடு இணையத்தில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் ஒர்க் அவுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தன்னுடைய பாலோவர்ஸ்களாக மாற்றி வைத்திருக்கிறார். இப்படியான நிலையில் தான் தற்போது அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் ராஜா ராணி பட வாய்ப்பு வரும்போது நான் பெங்களூரில் இருந்தேன். அப்போதுதான் நான் மாடலிங் துறையில் கால் பதித்து கொண்டு இருந்த நேரம். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து என்னுடைய காஸ்டிங் ஏஜென்சியை தொடர்பு கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது குறித்து பேசினார்கள். அப்போது ஆர்யா தான் ஹீரோ, அட்லீ இயக்குனர். அந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்று சொன்னார்கள்.
அந்த நேரத்தில்தான் அவருக்கு ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக சின்ன கேரக்டரில் அறிமுகமாகி இருந்தாலும் சாக்ஷிக்கு பெரிய அளவில் அறிமுகம் பிரபலத்தை கொடுத்தது காலா படம் தான். நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு காலா திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக சாக்ஷி நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்தில் டாக்டர் சாக்ஷி நடித்திருந்தார்.
எனக்கு அப்போது தயாரிப்பு பற்றி எல்லாம் பெரிய அளவில் தெரியாது. அதனால் அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பி இருந்தேன். அவர்கள் கூப்பிட்டபடி இரண்டு நாள் சூட்டிங் போனேன் பிறகு அவர்கள் கூப்பிடுவார்கள் என்று அழைப்புக்காக காத்திருந்தேன். ஆனால் படத்தோட சூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால் நான் டேட்டுக்காக வெயிட் பண்ணிக் கொண்டே இருந்தேன்.
நான் இயக்குனர் கிட்ட அந்த நேரத்தில் பேசி இருக்கணும், ஆனால் நான் பேசாமல் விட்டது பெரிய தப்பு. ஆனால் அந்த தவறு எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. என்னிடம் சொன்னது வேறு, ஆனால் அங்கே செய்தது வேறாக இருந்தது என்று வேதனையாக அந்த பேட்டியில் சாக்ஷி பேசியிருக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications