பிக் பாஸ் 5 கொண்டாட்டம்: தொடங்கிய கச்சேரி.. யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா..இப்படி பண்ணிட்டாங்களே
சென்னை: ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் கொண்டாட்டம் தற்போது தொடங்கி இருக்கிறது.
இந்த கொண்டாட்டத்தில் பல போட்டியாளர்களை காணவில்லையே என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.

போட்டியாளர்களை தேடும் ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலே ஒளிபரப்பாகி தற்போது முடிவடைந்ததும், தொடர்ந்து பார்த்து வந்த போட்டியாளர்களை ஒரு சில நாட்களாக பார்க்காமல் ரசிகர்கள் இருந்தனர். இவர்கள் எப்போதும் மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் வருவார்கள் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்விகளை கேட்டு வந்து கொண்டிருந்தனர்.

கொண்டாட்டம் தொடங்கியாச்சி
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சீசன் முடிந்த பிறகும் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் கொண்டாட்டத்தில் மீண்டும் அனைவரையும் மகிழ்விப்பார்கள். அந்த வகையில் தற்போது ஐந்தாவது சீசன் போட்டியாளர்கள் எப்போது மீண்டும் வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது அதற்கான அடித்தளம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கான ப்ரமோ ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு சில போட்டியாளர்கள் மட்டும்தான் கலந்து கொண்டிருக்கிறார்களாம்.

இதுதான் காரணமாம்
ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி தற்போது இந்த சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்க போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதில் தங்களுடைய மனம் கவர்ந்த ஒரு சில போட்டியாளர்களின் முகங்களை காணவில்லையே என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஒருசில பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் அவர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வலம்வரும் புகைப்படங்கள்
தற்போது இந்த சீசன் கொண்டாட்டத்தில் ராஜூ, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, அபிஷேக், பாவனி, இசைவாணி, மது போன்றோரின் புகைப்படங்கள் மட்டும்தான் வெளியேறி இருக்கின்றது. இதில் மீதமுள்ள போட்டியாளர்கள் கலந்து கொள்வார்களா?? இல்லையா?? என்பது ரசிகர்களின் ஆர்வமாக இருக்கும் நிலையில், அதிகமான ரசிகர்கள் தாமரைச்செல்வி இதில் வரவில்லையா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அமீர், சஞ்சீவ், சிபி, அக்ஷரா, வருண், அபிநய், சின்ன பொண்ணு, ஸ்ருதி, நாடியா சிங், நிரூப் போன்றோரை காணவில்லையே என்றும் ரசிகர்கள் தேடி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications