பிக் பாஸ் வன்மத்தை தூண்டுகிறதா?அப்போ வனிதா இப்போ இவரா? ரசிகர்களால் தாக்கப்பட்ட போட்டியாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை தாண்டி அதை பலர் நிஜமென நம்பி எதார்த்தத்தை மீறும் வகையில் நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது போட்டியாளர் ஒருவரை ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் வனிதாவை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் முகத்தில் தாக்கி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து இப்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஒருவரை ரசிகர்கள் சிலர் காரை உடைத்து தாக்க உட்பட்ட செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

bigg boss season 7 contestant amardeep attacked by Pallavi Prasad fans

பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளில் துவங்கப்பட்டது. அந்த வகையில் தான் தற்போது கூட பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் முதல் சீசன் தொடங்கப்படும் போது இருந்த எதிர்பார்ப்பு இப்போதைய சீசன்களில் இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு அந்த நிகழ்ச்சி பற்றி தான் இணையத்தில் அதிகமானோர் பேசி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்க்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சி பற்றிய வீடியோக்களை பார்த்து கமெண்ட் தெரிவித்து வருவதை காண முடியும். அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கில் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது.

தமிழில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது போல தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதில் தமிழில் பிரபலமான கிரண், ஷகீலா உட்பட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் youtube மூலம் பிரபலம் அடைந்த பல்லவி பிரசாத் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

bigg boss season 7 contestant amardeep attacked by Pallavi Prasad fans

இவர் விவசாயம் குறித்து பல தகவல்களை தன்னுடைய youtube பக்கத்தில் தெரிவித்துக் கொண்டிருப்பார். தன்னுடைய youtube சேனல் மூலமாக இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் மூலமாகத்தான் இவருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தன்னோடு பல நடிகர் நடிகைகள் நடிப்பு துறையில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தாலும் தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட வேண்டும் என்பதற்காக பல்லவி பிரசாத் ஆரம்பத்தில் ரொம்பவே முயற்சி எடுத்து இருந்தார்.

bigg boss season 7 contestant amardeep attacked by Pallavi Prasad fans

அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரபல சீரியல் நடிகரும் விஜய் டிவி சீரியல் நடிகை தேஜஸ்வினியின் கணவருமான அமர்தீப் வெற்றி பெற்றிருந்தார். ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் அமர்தீப் மற்றும் பல்லவி பிரசாத்துக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவி வந்தது. மக்களின் ஆதரவோடு பல்லவி பிரசாத் வெற்றியாளர் என்று நாகர்ஜுனா அறிவித்திருந்தார்.

bigg boss season 7 contestant amardeep attacked by Pallavi Prasad fans

அதைத்தொடர்ந்து பலதரப்பட்டோரும் பல்லவி பிரசாத்துக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒரு சாமானிய மகன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 35 லட்சம் பணத்தை பெற்று இருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அதோடு இது ஒரு விவசாய மகனுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அமர்தீப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி கார் மூலம் வீட்டிற்கு சென்றபோது பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் சிலர் அமர்தீப் காரை தாக்கி உடைத்தது மட்டுமின்றி காரை துரத்திக் கொண்டு சென்ற சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இந்த செயலுக்கு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ரெட் கார்டு குறித்து வனிதா விஜயகுமார் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியதற்கு அவரை மர்ம நபர் ஒருவர் முகத்தின் தாக்கி இருந்த நிலையில் இப்போது தெலுங்கிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது குறித்து பலரும் பேசி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+