பிக் பாஸ் 8: அதிரடியாக போட்டியாளர்களை திணறடித்த விஜய் சேதுபதி.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்
சென்னை: தமிழக மக்களின் நெஞ்சம் வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிஸோடு முதலே ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இந்த முறை, ஹோஸ்டாக களமிறங்கிய நடிகர் விஜய் சேதுபதி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சியை அருமையாகத் தொகுத்து வழங்கி வருகிறார். வார முடிவில் எந்த தயக்கமும் இல்லாமல் பிரச்சனைகளை நேரடியாக அணுகும், போட்டியாளர்களின் தவறுகளை அவர்களிடமே கேட்டுவிடும் அவரது தைரியம், பலரையும் ஈர்த்துள்ளது.
வாரம் முழுக்க வீட்டில் நடந்த சம்பவங்களின், முக்கிய தருணங்களை விவாதித்து, தவறுகளைப் போட்டியாளர்களிடம் சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை. வீட்டில் நடந்த சம்பவங்களின் பின்னணிகளை அலசுவதுடன், அதற்கான தீர்வுகளையும் அசத்தலாகச் சொல்லும் அவரது திறமை பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
வீட்டில் ஆண்களிடம் ஒற்றுமை நிலவினாலும், பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லாததைச் சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்து கொள்ளவும் பரிந்துரைத்தார். போட்டியாளர்களை அன்பாக அணுகுவதும், அவர்களது தவறுகளைக் கடுமையாகக் கண்டிப்பதும் என அதிரடியில் மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி.

வார முடிவில் எலிமினேசன் ரவுண்டில், இந்த முறை ரவீந்தர் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தை மிகக் கவனமாகக் கையாண்ட விஜய் சேதுபதி, மீதமுள்ள போட்டியாளர்களைப் பற்றிய தனது நேர்மையான கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.
ஆரம்பம் முதலே பல புதுமைகளுடன், எதிர்பாரா திருப்பங்களுடன், கலக்கலாக நடந்து வரும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியினை, உங்கள் விஜய் தொலைக்காட்சியிலும், 24/7 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும் கண்டுகளியுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications