முதல் எபிஸோடிலேயே அதிரடி, 24 மணி நேரத்தில் வெளியேறும் போட்டியாளர்! அதிரடி காட்டும் பிக்பாஸ் சீசன் 8
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.
ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா? என வீட்டைப் பிரித்து ஆச்சரியம் தந்தவர், எபிஸோடின் முடிவில் மீண்டும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.
இன்றைய நிகழ்ச்சியின் முடிவில், பார்வையாளர்களிடம் உரையாடிய விஜய் சேதுபதி, "இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" எனும் பிக்பாஸ் தீமுக்கு ஏற்றவாறு, பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டிற்குள் நுழைந்த உடனே அறிவிக்கப்பட்ட எவிக்சன், வீட்டுக்குள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.
போட்டியாளர்கள், ரசிகர்கள் என எவருமே எதிர்பாராத இந்த அறிவிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை, முதல் எபிஸோடிலேயே உச்சத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளது.
புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் யார் வெளியேறப்போகிறார் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications