பிக் பாஸ் 8ல் தொகுப்பாளர் இவர்தானா? அக்ரிமெண்ட் கூட கையெழுத்து! ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 8வது சீசனை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் அறிவித்ததை தொடர்ந்து யார் அவருக்கு பதிலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது சமீபத்தில் இணையத்தில் அடுத்து யார் தொகுப்பாளர் என்ற ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்து 7 சீசன்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பு பெறுவதற்கு முக்கிய காரணமாக கமல்ஹாசனும் இருந்து வந்தார். அதுவரைக்கும் உலக அளவில் பல திரைப்படங்களில் நடித்து பெயர் வாங்கிய கமல்ஹாசன் முதல் முறையாக சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

கமல்ஹாசனுக்காகவே வார இறுதி நாட்களில் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம். ஒரு வாரம் முழுக்க நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்ப்பு சொல்வதற்காகவும், தட்டி கேட்பதற்காகவும் கமல்ஹாசன் வருவார். அதில் கமல்ஹாசன் ஒவ்வொரு வாரமும் என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் காத்திருப்பார்கள்.
ஒவ்வொரு வாரமும் தாங்கள் செய்யும் செயல்கள் வெளியே எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக போட்டியாளர்களும் விதவிதமான அலங்காரத்தோடு கமல்ஹாசன் முன்பு பவ்யமாக அமர்ந்திருப்பார்கள். அதிலும் இந்த நிகழ்ச்சியில் வார நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டிஆர்பியும் அதிகமாக இருக்கும்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கமல்ஹாசன் இந்த முறை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இருக்கும் நிலையில் கமல்ஹாசன் திடீரென இந்த அறிவிப்பு வெளியிட்டது பலரையும் அதிர்ச்சடைய வைத்தது. அதோடு இனி யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், கேள்விகளும் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது சில தகவல்களும் லீக் ஆகி இருக்கிறது. அதாவது இப்போது மக்களின் மனநிலையின் படி சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று அதிகமானோர் கூறி வருகிறார்கள். காரணம் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதித்திருந்த நேரத்தில் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். அதுவும் சிறப்பாக இருந்தது.
அதுபோல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி இருக்கிறார். அதனால் அவருக்கு இந்த நிகழ்ச்சியை எப்படி ஹேண்டில் பண்ண வேண்டும் என்ற திறமை இருக்கிறது. அவரே இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பது ஒரு தரபினரின் வாதமாக இருக்கிறது. இந்த நிலையில் சேனல் தரப்பில் இருந்து இப்போது சிம்பு சூர்யா மற்றும் விஜய் சேதுபதி இடம்தான் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிலும் கடைசியில் விஜய் சேதுபதி தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு அக்ரிமெண்டில் கையெழுத்திட்டதாகவும், இன்னும் பத்து நாட்களில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாக போகிறது என்றும் சொல்லப்படுகிறது. மகாராஜா திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஜய் சேதுபதி வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பலருடைய கருத்தாகவும் இருக்கிறது.
ஏற்கனவே விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுபோல இந்த நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மகாராஜா படம் பிரமோஷனுக்காக கலந்து கொண்ட போது நான் கலகலப்பான நிகழ்ச்சிகளில் இருப்பதை தான் விரும்புவேன்.
ஆனால் இதற்கு முன்பு நான் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அங்கு ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அது எனக்கு பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறியிருந்தார். இதனால் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தால் எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications