இப்படியா அசிங்கப்படுத்துவீங்க? புகழால் விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து கோபமாக வெளியேறிய சௌந்தர்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சீசன் 10 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக தேர்வான சௌந்தர்யா கலந்து கொண்டிருக்கிறார். அப்போது புகழ் செய்த செயலால் சௌந்தர்யா கோபப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொள்கிறார்கள். வார இறுதியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் வாரம் முழுக்க மக்கள் முன்பு வரும் சீரியல் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்வார்கள்.

அதிலும் அண்டகாகசம், கலக்கப்போவது யாரு, கம்பெனி, ஸ்டார் மியூசிக் என்று புதிய புதிய பெயரில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் எல்லாம் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். அதுபோல சமீபத்தில் முடிவுக்கு வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் ரன்னராக வந்து பல இளம் ரசிகர்களுக்கு கவர்ந்த சௌந்தர்யாவை விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் சில வாரங்களாகவே பார்க்க முடிகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கும் கலக்கப்போவது யாரு சீசன் 10 நிகழ்ச்சியிலும் சௌந்தர்யா மற்றும் ரயான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் புகழ் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பு விருந்தினராக வந்த சௌந்தர்யாவிடம் காதல் ப்ரபோஸ் செய்வது போல நடித்து இருக்கிறார்.

அந்த நேரத்தில் புகழ் பேசுவதை பார்த்து நடுவர்களாக இருக்கும் மதுரை முத்து, அமுதவாணன் மற்றும் ராமர் மூன்று பேரும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது புகழ் கோபமாகி சௌந்தர்யா பக்கத்தில் இருந்த சேரை எட்டி உதைக்க அதை பார்த்து சௌந்தர்யா கடுப்பாகி, "என்னை என்ன சொல்லி இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டீங்க? சிறப்பு விருந்தினராக வந்தா போதும் என்று கூப்பிட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க" என்று கோபித்துக் கொண்டு ரயானை கூப்பிட்டுக் கொண்டு கிளம்பி விடுகிறார்.

இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது நிஜத்தில் சௌந்தர்யா புகழ் செய்த செயலால் கோபமாகி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டாரா அல்லது புகழை பிராங் செய்கிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications