பிக் பாஸ் அபிஷேக் மனைவியின் வளைகாப்பு.. பயந்தபடி மனைவி சொன்ன வார்த்தை! குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அபிஷேக் ராஜாவின் மனைவியின் வளைகாப்பு இன்று நடைபெற்று இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் தன்னுடைய கணவர் குறித்து அபிஷேக் மனைவி சொன்ன வார்த்தைக்கு ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

பிரபல யூட்டிப்பராக யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு அபிஷேக் ராஜா அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு இருந்தார்.

television vijay tv bigg boss

பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலகலப்பாக இருக்கும் போது அபிஷேக் பிரியங்கா மற்றும் பாவனியோடு அடிக்கடி சண்டை இட்டுக் கொள்வதும் பிறகு வார இறுதி நாட்களில் சமரசம் ஆகி விடுவதும் வாடிக்கையாக இருந்தது.

அதனாலேயே அவர் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார். பிறகும் இவருக்கு அந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஆனாலும் அதிக நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்க முடியவில்லை. அந்த நேரத்தில் அபிஷேக் ராஜா பற்றிய சர்ச்சைகளும் அதிகமாக பேசப்பட்டது.

television vijay tv bigg boss

காரணம் அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை பற்றியும் கமல்ஹாசனை பற்றி கழுவி கழுவி ஊற்றிய வீடியோக்களும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது வைரலாகி வந்தது. அதுபோல அபிஷேக் ராஜாவின் முதல் மனைவி பிரச்சனைகளும் அந்த நேரத்தில் பூகம்பமாக வெடித்தது.

தன்னை பற்றி எவ்வளவு சர்ச்சைகள் வந்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாத அபிஷேக் ராஜா சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமண செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு அவருடைய மனைவியும் அபிஷேக்கும் பல இன்டர்வியூக்களில் பேசிக் கொண்டிருந்தனர்.

television vijay tv bigg boss

இந்த நிலையில் அபிஷேக் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்றுகிறது. அதில் பிரசன்னா, சினேகா உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வீடியோக்களை அபிஷேக் மற்றும் அவருடைய மனைவி தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

television vijay tv bigg boss

அதோடு அந்த வீடியோவில் ஒரு இடத்தில் நேரம் ஆகிவிட்டது இப்போ மேடைக்கு போகலன்னா என் கணவர் உண்டு இல்லைன்னு பண்ணிடுவார் என்று அவருடைய மனைவி பயந்தபடி பேசுகிறார். இதை வைத்து அதிகமான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் இவர் எல்லாரையும் மிரட்டிட்டு இருந்தார் என்று பார்த்தால் வீட்டிலும் இவர் இதே வேலைதான் செய்கிறாரா? கர்ப்பமாக இருக்கும் பொண்ணு இவ்வளவு பயப்படுதே என்று கிண்டல் செய்து கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அதோடு இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

television vijay tv bigg boss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+