பிக் பாஸ் சீசன் 7: சேனல் தரப்பில் பேசப்பட்ட பிரபலங்கள்.. வெளியான லிஸ்ட்.. இவங்களை எதிர்பார்க்கலையே!
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் தொடங்கப்பட இருக்கிறது.
இதற்காக கமல்ஹாசன் பங்கு பெற்ற ப்ரோமோ சூட்டிங் முடிவடைந்து விட்டது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ள சில பிரபலங்களிடம் சேனல் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் என்ன அடிப்படையில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறித்தும் பார்க்கலாம்.
விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது.6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு வருடமும் இந்த மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடும்.
ஆனால் இந்த முறை அடுத்த மாதத்தில் கடைசி வாரத்தில் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிடும் ஆனால் இந்த முறை சில பிரச்சனைகளால் லேட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கலந்துகொள்ள சில பிரபலங்களிடம் போட்டியாளர்களிடம் இப்போது சேனல் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதில் சில பிரபலங்களின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தொகுப்பாளர் ஜாக்குலினிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.
அதே நேரத்தில் ஜாக்லின் தொகுப்பாளராக மட்டுமல்லாமல், சின்ன திரையில் சீரியல் கதாநாயகியாகவும் வெள்ளி திரையிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டால் மீண்டும் பிரபலம் அடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அதுபோல நடிகர் பப்லு என்ற பிருத்திவிராஜ் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகியின் அப்பா கேரக்டரில் நடித்து வந்த பிரித்விராஜ் சமீபத்தில் தான் தன்னைவிட வயதில் குறைந்த இளம் பெண்ணை காதலித்து வருவதாக அவரே கூறியிருந்தார். இந்த நிலையில் இவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிகழ்ச்சிக்கான சுவாரசியம் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல சீரியல் நடிகர் தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் கலந்து கொள்வதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தினேஷ் கார்த்திக் ரச்சிதா குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தெரிந்ததுதான். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்புதான் இவர்களுடைய பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் சென்றிருந்தது. இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து நடிகை ரேகா நாயர் மற்றும் சமீபத்தில் கோவையில் தனியார் பேருந்தில் பெண் ஓட்டுனராக பணியாற்றி பிரபலம் அடைந்த ஷர்மிளாவும் இந்த நிகழ்ச்சியில் இந்த சீசனில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களைப் போன்று ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்த பிரபலங்கள் நிகழ்ச்சிக்கு வந்தால் நிகழ்ச்சி இன்னும் பிரபலமடையும் என்றும் ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications