பிக் பாஸை விட்டு இதனால் தான் போகிறேன்.. கண்ணீருடன் ஓபனாக சொல்லிவிட்டு கிளம்பிய குமரன்.. நல்ல முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து திடீரென குமரன் 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி இருக்கிறார். இந்த தகவல் நேற்றே வெளியாகி இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான ப்ரோமோ இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் தான் எதற்காக வெளியே போகிறேன் என்று அவர் கண்ணீருடன் பேசி இருக்கிறார். இதுவரைக்கும் அவருக்கு அதிகமான பாசிட்டிவ் தான் இருந்து வந்தது. ஆனாலும் இப்போது இந்த முடிவெடுத்த காரணம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போயிட்டு வந்த 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்து உள்ளிருக்கும் 3 போட்டியாளர்களை ரீப்ளேஸ் பண்ணுவதற்காக அவர்கள் கையுடன் தனது கையில் ஒரு கயிறைகட்டி கட்டி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தொடர விருப்பமில்லை என நினைத்தால் அந்த கயிறை ஒருவர் கட் பண்ணி விட்டு வெளியே போய்விடலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படி கயிற்றை கட் பண்ண வைக்க வேண்டும் என்றால் எதிர் தரப்பில் இருக்கும் போட்டியாளர்களை ட்ரிக்கர் பண்ணலாம், என்ன வேணாலும் செய்யலாம் என்று சொல்லப்பட்டு இருப்பதாலேயே குமரனை செலக்ட் செய்த லட்சுமி பிரியா ஆரம்பத்தில் இருந்து அவரை ட்ரிக்கர் பண்ணியே பேசிக் கொண்டிருந்தார்.

Bigg Boss Vijay Sethupathi Vijay TV

பிக் பாஸ் குமரன் விளையாட்டு

நீ மிச்சர் இந்த வீட்டிற்குள் ஒன்றுமே பண்ணவில்லை, எப்படித்தான் இருக்குற என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். முதலில் பொறுமையாக இருந்த குமரன் நேற்று கொதித்து எழுந்து விட்டார். நான் எதுவுமே செய்யவில்லை என்னை யாரும் கவனிக்கவே இல்லைன்னு நீ சொல்லுறியே ஆனா நீதான் வெளியே போயிட்டு வந்து இருக்கீங்க... அதை கவனிச்சுக்கோங்க என்று பதிலடி கொடுத்து ஆப் பண்ணி விட்டார். இதற்கு முன்பு இரண்டு வாரம் குமரனின் ஆட்டம் பெரிதாக சுவாரஸ்யமாக இல்லை என்றே சொல்லலாம்.

அவ்வபோது கிடைக்கிற சான்சில் கோல் போடுவார். பேச வேண்டிய இடத்தில் பேசிக்கொண்டிருந்தார் ஆனால் தைரியமாக எல்லா இடத்திலும் அவர் குரல் கொடுக்க வில்லை. இது அவருக்கு மைனஸ் ஆகவே இருந்தது. ஆனால் லக்ஷ்மி பிரியா இவரை ட்ரிகர் பண்ணி இவருக்குள் இருக்கும் இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வந்திருந்தார். அதுவும் மக்களால் பாராட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இவர் திடீரென என்ன நினைத்தாரோ இன்று லைவில் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்.

Bigg Boss Vijay Sethupathi Vijay TV

பிக் பாஸ் 10 ப்ரோமோ

அதற்கு பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் இப்போது ஒரு புது டாஸ்க் வைத்திருக்கிறார்கள். அதாவது 6,7 வாரங்களுக்கு பிறகு தான் பணப்பெட்டி டாஸ்க் வரும். ஆனால் இந்த டாஸ்க் இப்பதே வந்துவிட்டது. அதில் 5 லட்சம் ஆரம்ப தொகையாக வைக்கப்பட்டிருக்கிறது. இதில் படிப்படியாக பணம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. கடைசியில் டைட்டில் வின்னரின் பணத்தில் இருந்து தான் இந்த பணம் கழிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

கதறி அழுத குமரன்

இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீசன் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட குமரன் திடீரென பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டார். அது உள்ளிருந்து அனைத்து போட்டியாளர்களுக்குமே அதிர்ச்சி தான். அதனாலேயே எல்லோரும் குமரன் இந்த முடிவு எடுக்காதீங்க என்று தடுத்து பார்த்தனர். அதற்கு குமரன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு, எங்க அப்பாவுக்கு ஞாபகம் மறதி இருக்கு... நான் உள்ளே இருக்கும் நேரத்தில் அவருக்கு ஏதாவது ஆகிடுச்சின்னா என்னால் அந்த குற்ற உணர்ச்சியில் வாழ முடியாது என்று கதறி அழுதி இருக்கிறார். அது பார்ப்போரையும் கலங்க வைத்திருக்கிறது.

Bigg Boss Vijay Sethupathi Vijay TV

இதற்கு முன்பு நடந்தது

இதற்கு முந்தைய சீசனில் கானா வினோத் இப்படித்தான் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் திடீரென அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். அதேபோல இப்போ குமரனும் செய்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்றால் பெரிய வாய்ப்புகள் வரும் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்றெல்லாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தாலும் யாருக்கும் வாய்ப்பு அப்படி அமைந்தது இல்லை. அதனாலேயே குமரன் இப்போ பொறுப்பாக இந்த முடிவு எடுத்திருப்பது கூட நல்லது தான் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+