பிக் பாஸில் ரசிகர்கள் சொன்னது போலவே நடந்துடுச்சு.. காமன்மேனாக உள்ளே வந்த 3 பேர்.. மிரட்டிய சேதுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன் மேன் கலந்து கொள்வதற்காக பிக் பாஸ் காமன்மேன் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் அதில் 50 பேரை செலக்ட் செய்து கடைசியில் 8 போட்டியாளர்களை பிக் பாஸ் தமிழ் சீசன் 10 மேடைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த மேடையில் இருந்து 3 பேரை விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கிறார். இதில் எதிர்பாராத சம்பவங்களும் நடந்து இருக்கிறது.

போட்டியாளர்கள் மேடையில் வந்து நின்றதும் இவர்கள் அனைவரையுமே அப்படியே பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி விடுவார்களா? என்ற கேள்விதான் எல்லோருக்கும் வந்திருக்கும். இதற்கு முன்பு 6 போட்டியாளர்கள் பிக் பாஸ் மேடைக்கு வந்திருந்தனர். அதில் 2 போட்டியாளர்களையே மேடையிலேயே வெளியே அனுப்பி வைத்து விட்டார்கள். உள்ளே இப்போதைக்கு 4 பேர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பிக் பாஸ் 10 போட்டியாளர்கள்

இதனால் இந்த காமன்மேன் 8 பேரும் உள்ளே அனுப்பப் போகிறார்களா? அல்லது இவர்களில் யாரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்புவார்கள் என்று எதிர்பார்ப்பு ஆடியன்ஸ்க்கு இருந்தது. ஆனால் கடைசியில் அவர்கள் அனைவருக்குமே கையில் ஒரு பொக்கே கொடுத்து உள்ளே பேப்பர் இருந்த ஐந்து பேரை வெளியே அனுப்பிவிட்டு 3 பேரை செலக்ட் செய்தனர். அதில் ஷாமா, முனியம்மா, ஜேசன் என்ற மூன்று பேரை செலக்ட் செய்து இருக்கிறார்கள். இதில் ஆரம்பத்திலிருந்து முனியம்மாவை பிக் பாஸ் வீட்டிற்குள் செலக்ட் செய்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்ததுதான் இப்போது நடந்திருக்கிறது.

Bigg Boss Bigg Boss Tamil Vijay TV

பிக் பாஸ் காமன்மேன் வின்னர்

அதுபோல தூத்துக்குடியை சேர்ந்த ஜேசன் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் பேசி இருக்கிறார். ஆனால் நிகழ்ச்சிக்குள் போன பிறகு அவருடைய விளையாட்டு எப்படி இருக்கும் என்பது பொருத்திருந்து பார்த்தால் தான் தெரியும். அதுபோல முனியம்மா, இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு எனக்கு எதுவுமே தெரியாது என்னுடைய மகன்தான் லெட்டர் எழுதிப் போட்டான் என்று சொன்னதும் விஜய் சேதுபதி மகனை பாராட்டி இருந்தார்.

பிக் பாஸ் 10 முதல் 3 போட்டியாளர்கள்.. மேடையிலே நடந்த வாக்குவாதம்! விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை
பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் போகும் முனியம்மாளுக்காக அவருடைய கணவர் சீமான் மல்லிகை பூ வாங்கிக் கொண்டு வர அதையும் விஜய் சேதுபதி ஜாலியாக கிண்டல் செய்து இருந்தார். ஒருவழியாக இவர்கள் 3 பேரையும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்கள் அந்த வீட்டிற்குள் போனதும் முன்னே இருந்தவர்கள் இவர்களை சந்தோஷமாக வரவேற்று இருக்கிறார்கள்.

பிக் பாஸ் 10 முதல் நாள்

இன்று எல்லோரும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பது போல தான் கூடி கும்மாளம் போடுவார்கள். ஆனால் நாளை காலையில் இருந்து தான் இவர்களுடைய உண்மையான ஆட்டமே ஆரம்பமாகும். ப்ரோமோவில் யார் வரப்போகிறார்கள் என்பதற்காகவே சண்டை சச்சரவுகளில் ஈடுபட போகிறார்களா? அல்லது இந்த முறை ஜாலியாக கொண்டு போகப் போகிறார்களா என்று நாளை தான் தெரியப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+