Bigg Boss: இந்த சீசன் ஸ்பெஷல் இதுதான்! ஆரம்பத்திலே கமலுக்கு நன்றி சொல்லி விஜய் சேதுபதி செய்த செயல்
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று தொடங்கியாச்சு. இதில் ஆரம்பத்திலேயே வழக்கம் போல விஜய் சேதுபதி எல்லோருக்கும் நன்றி சொல்லி இருந்தாலும் இந்த முறை 10 வருடங்களை இந்த நிகழ்ச்சி கடந்து வந்திருக்கும் நிலையில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே நன்றி சொல்லியிருக்கிறார். அதோடு இந்த சீசனில் என்ன ஸ்பெஷல் என்று சொல்லி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒவ்வொரு சீசனிலும் ஒரு ஸ்பெஷல் இருக்கும். அதுபோல இந்த சீசனில் ஸ்பெஷல் என்னவென்றால் பிக் பாஸ் டீம் மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களும் முக்கிய முடிவெடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். அதாவது இந்த சீசனில் யார் இருக்க வேண்டும், யார் வெளியே போக வேண்டும் என்று மக்கள் தான் தீர்மானிக்க போகிறார்கள். இதுவரைக்கும் உங்க வீட்டில் மட்டுமே உங்க குரல் ஓங்கிக் கொண்டிருந்தால் இனி உங்களுடைய ஓட்டை மட்டுமல்ல உங்களுடைய குரலையும் இந்த நிகழ்ச்சியில் நீங்க தைரியமாக பேசலாம் என்று சொல்லி இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10
அதுபோல இப்பொழுது வழக்கம் போல வீட்டை சுத்தி காட்டும் படலம் தான் நடந்து கொண்டிருக்கிறது. வீட்டிற்கு உள்ளே காலடி எடுத்து வைத்த விஜய் சேதுபதி சிறைச்சாலையை முதலில் சுட்டிக்காட்டி இருக்கிறார். பிறகு அங்கிருக்கும் புல்வெளி மற்றும் ஓபன் பிளேஸ் எல்லாவற்றிலும் சோலார் அமைக்கப்பட்டிருப்பதற்கு சைடு கேப்பில் சோலார் நிறுவனத்திற்கு ஒரு ப்ரோமோசனை போட்டு விட்டு பிறகு வீட்டிற்குள் சுற்றிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.
கமல்ஹாசனுக்கு நன்றி
ஆனால் மேடையில் பேசும்போது 10 வருஷம் இந்த நிகழ்ச்சி தொடங்கி நடந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் தொடங்கி மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் பெற்ற கமல் சாருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் அவரால்தான் இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமானது என்பது போல பேசியிருக்கிறார். மேலும் தன்னை இந்த நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கும் நன்றி சொல்லி இருக்கிறார்.
பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து வீட்டை சுற்றி காட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது ஏற்கனவே வெளியான புகைப்படங்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு நபர் லுங்கி கட்டி இருப்பது போல இருந்த சிலையை பற்றிய பேசி இருக்கிறார். இந்த சிலையை பார்த்தீர்களா? ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு சிலை இருக்கும் ஆனால் இந்த முறை இருப்பது ஒரு வித்தியாசமாக இருக்கிறது.

ஸ்பெஷல் ரூம்
இதில் முகம் இல்லை ஆனால் காது இருக்கிறது. இதிலிருந்து என்ன சொல்ற வராங்கன்னு தெரியுதா? உள்ள என்ன நடக்கிறது என்பதை எல்லாரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஊருக்கே தெரிஞ்ச ரகசியத்தை அவரே கண்டுபிடித்தது போல சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுபோல இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு ஸ்பெஷல் ரூம் ஒன்று இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ரவுண்டாக உட்காருவது போல அமைக்கப்பட்டு இருக்கிறது. அதை ரூமுக்குள் மக்கள் குரல் தான் பேசும் என்று பிக் பாஸ் சொல்லி விடுகிறார். ஆனால் இந்த ரூமுக்கு என்ன பெயர் என்பது சஸ்பென்ஸ் என்று சொல்லி இருக்கிறார். இதனால் என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications
