பிக் பாஸ் தமிழ் 5:சும்மாவா சான்ஸ் கொடுத்திருப்பார்..!? கமல், ராஜ்குமார் பெரியசாமியின் பின்னணி என்ன..?
சென்னை: கமல் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை பற்றி வலைத்தளத்தில் ரசிகர்கள் தேடி வருகின்றனர்
கமல் வாய்ப்பு கொடுத்து இருக்கும் நிலையில் இவருடைய திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

யார்..அந்த இயக்குனர்
பிக் பாஸ் 5 இறுதிப்போட்டி நிகழ்ச்சியின் போது தனது ராஜ்கமல் பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோவாக சிவகார்த்திகேயனையும்,இயக்குனராக ராஜ்குமார் பெரிய சாமியையும் கமல் அறிவித்தபோது... யார்..!! அந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..!? என்ற கேள்வி அனைவர் மனதிலும் கண்டிப்பாக எழுந்திருக்கும். ஏனென்றால் கமல் ஒருவருக்கு வாய்ப்பு தருகிறார் என்றால், அந்த நபர் கொஞ்சம் ஸ்பெஷல் திறமை உள்ளவராக தான் கண்டிப்பாக இருக்கக் கூடும்,என்று ஒரு கருத்து பொதுவாக உண்டு. எனவே இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை குறித்து நம்ம நெட்டிசன்கள் உடனே இணையத்தில் ஆரம்பித்துவிட்டனர்.

விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு இயக்குனர்
கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த "ரங்கூன்" படத்தின் இயக்குனராக அறியப்படும் ராஜ்குமார் பெரியசாமி, சென்னை லயோலா கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர். விஜய் டிவியில் பல ஷோக்களுக்கும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் இயக்குனராகவும், கோ-ப்ரொடியூசர் ஆகவும் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பிரம்மாண்ட வெற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் ஏழாம் அறிவு, துப்பாக்கி போன்ற மிகப்பெரிய வெற்றிப் படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இயக்குனர் ஏ. .ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு மிகவும் பிடித்த இணை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி குறிப்பிடத்தக்கவர்.அதனால் தான் ராஜ்குமார் பெரியசாமியின் முதல் படமான ரங்கூன் படத்தை தாமே தயாரித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய் டிவியிலிருந்து உருவாகும் இயக்குனர்
ஏற்கனவே விஜய் டிவியின் தயாரிப்புகளாக பல நட்சத்திரங்கள் திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஆரம்பத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்களும் கோலமாவு கோகிலா,டாக்டர், படங்கள் மற்றும் தற்பொழுது தளபதி விஜய்யுடன் பீஸ்ட் படம் என்று ஒரு லெவலுக்கு முன்னேறி விட்டார். அதேபோல் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கும் ஒரு பெரிய பிளாட்பார்ம் அமைத்துக் கொடுக்க நினைத்த விஜய் டிவி கமல் அவர்களின் தயாரிப்பு நிறுவனம் மூலமாக சிவகார்த்திகேயனை வைத்து இந்த பட பணிகளை ஆரம்பித்திருப்பதாக பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

ரசிகர்களின் வாழ்த்துக்கள்
பிக் பாஸ்4 இறுதிப் போட்டியின் போது அறிவிப்பு செய்யப்பட்ட இந்தியன் 2 சினிமா இன்னும் படப்பிடிப்பு முடியாமல், பல பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு வெளிவருமா..!? வராதா..!? என்று சந்தேகத்தில் இருக்கும் நிலையில், பிக் பாஸ் 5 சீசன் இறுதிப்போட்டியில் அறிவிக்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் படமாவது எந்தவித தடையுமின்றி சிறப்பாக அனைத்து பணிகளையும் முடித்து, வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற கமல் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications