அசீம் வீடியோ வெளியிட்டதும் ட்ரெண்ட் ஆன ஹேஷ் டேக்.. அம்பலமான அசீம் ரகசியங்கள்!? காரணம் அவர்கள் தானா?
அசீம் கமல்ஹாசனை பற்றி தான் பேசவில்லை என்று விளக்கி வீடியோ வெளியிட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக சில ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆனது. அதைப் பற்றிய ஆதாரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு அசீம் ஆதரவாக சில ஹேஷ் டேக் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அசீம் தான் கமல்ஹாசனை திட்டி வீடியோ வெளியிடவில்லை என்று விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அடுத்த சில மணி நேரங்களில் ட்விட்டர் பக்கத்தில் AzeemApologizing2Andavar என்ற ஹேஷ் டேக் டிரண்ட் ஆனது.
அந்த ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்த இணைய முகவரி உடையவர்கள் அதிகமாக வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று தற்போது ஆதாரங்கள் வெளியாகி இருக்கிறது.

அசீம் கூறிய வார்த்தை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது இப்ப வரைக்கும் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் அசீம் குறித்து அதிகமான கருத்துக்கள் அடிக்கடி வெளியாகி வரும், அதற்கு அசீம் விளக்கம் கொடுத்தும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் அசீம் பேசிக் கொண்டிருக்கும்போது என்னுடைய மகன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வளர வேண்டிய அவசியம் இல்லை. என் மகனோடு நான் நேரம் செலவழிக்க எனக்கு பல்லாயிரம் மணி நேரம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

பிக் பாஸ் வந்த காரணம்
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அசீம் குறித்து இதே கருத்தை அதிகமான முறை கமல் கூறி இருந்தார். அசீம் ஒவ்வொரு முறையும் தவறு செய்யும் போது அவருக்கு வார்னிங் கொடுத்த கமல்ஹாசன், வெளியே உங்களுடைய மகன் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு அறிவுரையும் கூறி இருந்தார். ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான்
கலந்து கொள்வது என்னுடைய மகன் என்னை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்று அசீம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு தான் கமல்ஹாசனும் பலமுறை இதை குறிப்பிட்டு இருந்தார்.

பலருடைய கருத்து
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் பலமுறை அடுத்தவர்களை மரியாதை குறைவான வார்த்தைகளில் பேசி இருக்கிறார். அடுத்தவர்களை சுயமரியாதையை இழக்கும் வகையில் பேசி இருக்கிறார். இதனால் இவருக்கு டைட்டில் கிடைத்தது சரியானது அல்ல என்று விக்ரமன், மகேஸ்வரி என பல போட்டியாளர்களும் இதே கருத்தை கூறி வந்தனர். இந்த நிலையில் சில ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் இதே கருத்தை கூறி வந்த நிலையில் தான். அதற்குத்தான் அப்படி ஒரு வார்த்தையை பேசியிருந்தேன் ஆனால் கமல்ஹாசனை குறித்து நான் பேசவில்லை என்று அசீம் விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

கமல்ஹாசன் பற்றி பேசவில்லை
அந்த வீடியோவில் அசீம், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு youtube சேனல் ஒன்று பேன்ஸ் மீட் நடத்திருந்தார்கள். அப்போது ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு நான் பதில் அளித்து இருந்தேன். அந்த வீடியோவை பகிர்ந்து நான் ஏதோ கமல் சாரை பேசியது போல என்னை மிகவும் பிடித்த ஹேட்டர்கள் தேவையில்லாமல் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். கமல் சார் எனக்கு சொன்னது முழுக்க முழுக்க என்னுடைய நல்லதற்காக சொன்ன விஷயம் தான். என் மகன் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பான். அதனால் கவனமாக விளையாட வேண்டும் என்று ஒவ்வொரு வாரமும் எனக்கு நல்லது தான் சொன்னார். ஆனால் அந்த விஷயத்தை நான் ஆடியன்ஸ்க்காக சொன்னதை பலர் கமல் சாரை சொன்னதைப் போல தவறாக சித்தரித்து போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நான் கிடையாது. கமல் சாரை நான் மிகவும் மதிக்கிறேன்.
அவர் என்னுடைய தந்தை போன்றவர். எனவே தேவையில்லாமல் இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.

அம்பலமான உண்மை
இந்த நிலையில் இந்த வீடியோ அசீம் வெளியிட்ட சில மணி நேரங்களில் twitter பக்கத்தில் என்ற ஹேஸ் டேக் ட்ரெண்டானது. ஆனால் இந்த ஹேஷ்டேக் போட்ட பெரும்பாலான twitter கணக்கு வைத்திருப்பவர்கள் வட இந்தியர்களின் பெயர்களைக் கொண்ட ட்விட்டர் கணக்காகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அசீமிருக்க ஆதரவாக பதிவிட்ட பல ட்விட்டர் கணக்கு பெரும்பாலும் இந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட ட்விட்டர் கணக்காக இருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி இருக்கும் நெட்டிசன்கள் அசீம் PRகளுக்கு இலட்சக்கணக்கில் செலவழித்து இப்படி ட்விட்டர் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொள்கிறார் என்று கூறி அசீமுடைய பித்தலாட்டம் அம்பலமாகி இருக்கிறது என கலாய்த்து வருகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications