புது படத்தில் பிக் பாஸ் ஜனனிக்கு ஜோடியாகும் ஜீ தமிழ் சீரியல் ஹீரோ.. இவர் அந்த சீரியல் நடிகையின் கணவர்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜனனி கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தில் சீரியல் நடிகர் ஆரியன் ஜோடியாக நடிக்கிறார். இவர் பாக்கியலட்சுமி, மீனாட்சி பொண்ணுங்க போன்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்.
சில வருடங்களாகவே சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் பலர் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லாம் வெள்ளி திரையில் நடித்து பிரபலமடைந்த நடிகர்கள் அவர்களுக்கு அங்கு வாய்ப்பு குறைய தொடங்கியதும் சின்னத்திரை பக்கம் திரும்புவார்கள்.

சின்னத்திரையில் தங்களுக்கென்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் இப்போது காலம் மாறி இருக்கிறது. சின்னத்திறையில் என்ட்ரி கொடுத்து வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வருகிறார்கள். வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடிப்பவர்களை விடவும் சின்னத்திரை மூலமாகத்தான் பலர் எளிதாக மக்கள் மத்தியில் பதிந்து விடுகிறார்கள்.
அதனால் வாய்ப்பு தேடுபவர்கள் சின்னத்திரையில் அறிமுகம் ஆவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான ஜனனி இப்போது வெள்ளித்திரையில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜனனி இலங்கையை சேர்ந்தவர். அங்கு டிவி நிகழ்ச்சிகள் செய்தி வாசிப்பாளராக இருந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6வது நிகழ்ச்சி அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஜனனி புதியதாக கதாநாயகி அவதாரம் எடுத்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஆரியன் நடிக்கிறார்.
நடிகர் ஆரியன் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு அந்த சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்போது அந்த சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து வெள்ளித்திறையில் கதாநாயகனாக என்ட்ரி கொடுக்கிறார்.
ஜனனி மற்றும் ஆரியன் நடிக்கும் திரைப்படத்திற்கு நிழல் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான பூஜை மற்றும் பெயர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்று இருக்கிறது. அதுபோல இந்த திரைப்படத்தில் நடிகர் ரமேஷ் கண்ணா, மதன்குமார், திவ்யா கிருஷ்ணன், ஹரி விஜய் என்ற பலரும் நடிகர்கள். அதோடு எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சிராணியாக மிரட்டிக்கொண்டிருக்கும் காயத்ரியும் நடிக்கிறாராம்.

இந்த படத்தை ஜோதி பாண்டியன் மற்றும் பிகே கணேஷ் குமார் ப்ரொடியூஸ் செய்கிறார்கள். அதுபோல ஏகே குமார் இந்த படத்தை இயக்குகிறார். அது மட்டுமல்லாமல் நடிகர் ஆரியன் சீரியல் நடிகை ஷபானாவின் கணவர்தான். ஷபானா ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலமாகத்தான் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சைமானாரார்.
அதற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலிலும் நடித்து இருந்தார். இந்த நிலையில் ஆரியன் மற்றும் ஜனனி புதியதாக நடிக்கும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications